பகத் பாசிலுக்கு மட்டும்தானா?!. பல பேருக்கு இருக்கு இந்த நோய்!.. பகீர் கிளப்பிய பிரபலம்..

by ராம் சுதன் |   ( Updated:2024-05-29 05:44:41  )
Bagath Fasil
X

Bagath Fasil

நடிகர் பகத்பாசில் விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்த இவர், வேட்டையன், மாரீசன், புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்குத் தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் இவர் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் 'எனக்கு 'ADHD' (Attention Deficit Hyperactivity Disorder) என்ற டிஸ்ஆர்டர் வந்துருக்கு'ன்னு வெளிப்படையா பகத்பாசில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிகப்படியான கோபம் வரும், மனசு ஒரு நிலையில் இருக்காது. திடீர் தடீர்னு எதையாவது செய்யத் தோணும். இது குழந்தைகளுக்கு வரும் வியாதி என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி வலைபேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இதையும் படிங்க... ‘நீலோற்பம் நீரில் இல்லை…’ இந்தியன் 2ல் தெறிக்க விட்ட ரொமான்டிக் சாங்கோட ஹைலைட்டே இதுதான்..!

மிகப்பெரிய நடிகரிடம் என் நண்பர் அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்தார். ஒருநாள் அவர் வீட்டில் வேலைக்காரர் இருந்தார். ஆனா அன்று அவர் வரல. அப்போது அசிஸ்டண்ட் டைரக்டர் கம்ப்யூட்டர்ல ஸ்கிரிப்ட் சம்பந்தமா ஏதோ வேலை பண்ணிக்கிட்டு இருக்காரு. அவரோட சேர்ந்து இன்னொருவரும் இருக்காரு. ஹீரோ பின்னாடி ஒரு சேர்ல இருந்து 'எனக்கு ஒரு காபி வேணும்'னு சொல்றாரு.

FF R

FF R

அப்புறம் அவரு அவரோட வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. ஆனா அங்க இருந்த அந்த இருவருக்கும் காபி போடத் தெரியாது. யாரு செய்றதுன்னு இருவரும் மாறி மாறிப் பார்க்கிறாங்க. ஆனா நம்ம பேரை அவரு சொல்லலன்னு அவங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

கொஞ்ச நேரத்துல கிச்சன்ல போயி பீங்கான் தட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாக உடைத்தாராம். 'எனக்கு காபி தராத வீட்டுல இந்த பீங்கான் தட்டுகள் எதற்கு?'ன்னு கேட்டு 15 பிளேட்டுகள் வரை உடைத்து விட்டாராம். அதற்குப் பிறகு அவர் ரூமுக்குப் போயிட்டாராம்.

பகத்பாசிலை விட பத்து மடங்கு பிரச்சனை இவர்களுக்கு இருக்கு. இதே போல நிறைய நடிகர்கள் இருக்காங்க. இவங்க எல்லாம் சொல்லாத விஷயத்தைப் பகத்பாசில் சொல்லியிருக்காரு. அந்தத் தைரியத்துக்காகவே அவருக்கு ஒரு சல்யூட். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story