நடிகர் விஜய் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்.. கோபப்பட மாட்டார்.. யாரிடமும் அதிகம் பேச மாட்டார் என்கிற இமேஜ் அவர் மீது இருக்கிறது. இந்நிலையில், அவரிடம் உதவியாளராக 10 வருடங்கள் பணிபுரிந்த செல்வம் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டி விஜய் ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அந்த பேட்டியில் ‘ஒருமுறை நான் விஜய் சாருக்கு டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன்.. வழக்கமாக நான்தான் அவருக்கு சாப்பாடு பரிமாறுவேன். அப்போது வெளியே யாரிடமோ செல்போனில் மிகவும் கோபமாக பேசிக் கொண்டிருந்தார் விஜய். அதே கோபத்தோடு உள்ளே வந்தவர் சாப்பிட ஆரம்பித்தார்..
திடீரென என கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.. நான் அருகில் இருந்த ஷோபாவில் விழுந்து விட்டேன்.. எழுந்து வந்து என்னை எட்டி உதைத்தார்.. அவர் எதற்காக அடிக்கிறார் என்று கூட எனக்கு புரியவில்லை.. ஆனால் அவரின் முகத்தில் அவ்வளவு கோபம் இருந்தது.. மறுநாள் காலையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் கேரவனில் இருக்கும் போது என்னிடம் மன்னிப்பு கேட்டார்’ என்று அவர் கூறியிருக்கிறார்.
செல்வம் விஜயின் அப்பா எஸ் சி சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். அதன் பின் விஜய்க்கு உதவியாளராக அவர் அப்பா நியமித்ததாக சொல்லி இருக்கிறார். மேலும், தற்போது எந்த வேலையும் இல்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன் எனவும் செல்வம் சொல்லியிருக்கிறார். இந்த செய்தி வெளியானதும் ‘விஜய் மேல் இப்படிப்பட்டவரா?’ என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்..
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…