
Cinema History
அவர் நடிச்சா நான் நடிக்க மாட்டேன்!.. பிரபல நடிகரின் வாய்ப்புகளை கெடுத்த வடிவேலு…
சின்ன கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்சமயம் பெரும் சிகரத்தை பிடித்திருப்பவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவில் அவர் நகைச்சுவைக்காக பிரபலமான படங்கள் உண்டு.
நகைச்சுவையை பொருத்தவரை மற்ற நடிகர்களை போல் இல்லாமல் வடிவேலு அதில் ஒரு தனித்தன்மையை கொண்டவர். ஒவ்வொரு திரைப்படத்திலும் அந்த படத்திற்கு ஏற்ற கதாபாத்திரம் போல அவரது நகைச்சுவையும் மாற்றி அமைத்துக் கொள்வார் வடிவேலு.

vadivelu
உதாரணமாக கூற வேண்டும் என்றால் தவசி படத்தில் வரும் வடிவேலுவிற்கும், எங்கள் அண்ணா திரைப்படத்தில் வருகிற வடிவேலுவிற்கும் இடையே வித்தியாசத்தை பார்க்க முடியும். அதே போல வசீகரா, வின்னர் படங்களில் வடிவேலுவின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல அவரும் மாறி இருப்பார்.
வடிவேலு அவருக்கென தனியாக ஒரு குழுவை வைத்திருந்தார் எப்போதுமே அவர்களையும் தனது படங்களில் நடிக்க வைத்து விடுவார். இப்படி இருக்கும்போது அவருடன் நடித்த சக நடிகர்கள் பலரும் பேட்டி கொடுக்கும் பொழுது வடிவேலு குறித்து சர்ச்சையான விஷயங்களை பேசி இருந்தனர்.
வாய்ப்புகளை இழந்த நடிகர்:
தமிழ் சினிமாவில் பெரிய நகைச்சுவை நடிகராக வேண்டும் என்ற கனவுடன் வந்த நடிகர்களில் நடிகர் காதல் சுகுமாரும் முக்கியமானவர். காதல், விருமாண்டி,பாபா போன்ற திரைப்படங்களில் இவரின் நகைச்சுவை பிரபலமானவை. ஆனால் சினிமாவில் தொடர்ந்து இவரால் வாய்ப்புகளை பெற முடியவில்லை.
ஒரு பேட்டியில் இது குறித்து அவர் கூறும் பொழுது தனக்கு வந்த வாய்ப்புகள் பலவும் வடிவேலு விவேக் போன்ற நடிகர்களால் கிடைக்காமல் போனது எனக் கூறியுள்ளார்.
இங்கிலீஷ்காரன், சச்சின், ஆறு போன்ற திரைப்படங்களில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் வடிவேலு அவருடன் நடிக்க மறுத்ததால் அந்த வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும் சுகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதுக்கே தனி தைரியம் வேணும்… இரவெல்லாம் தூங்காமல் காத்திருந்த பாரதிராஜா!…