Connect with us

அதுக்கே தனி தைரியம் வேணும்… இரவெல்லாம் தூங்காமல் காத்திருந்த பாரதிராஜா!…

Cinema History

அதுக்கே தனி தைரியம் வேணும்… இரவெல்லாம் தூங்காமல் காத்திருந்த பாரதிராஜா!…

தமிழ் சினிமா இயக்குனர்களில் வெறும் கமர்ஷியல் படங்களாக மட்டும் திரைப்படங்களை எடுக்காமல் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் வகையில் படம் எடுத்தவர் இயக்குனர் பாரதிராஜா.

தமிழ் சினிமாவில் எவ்வளவோ இயக்குனர்கள் வந்த பிறகும் கூட அவரை மட்டுமே இயக்குனர்களின் இமையம் என அழைக்கின்றனர். தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் முன் வெகுவாக கஷ்டப்பட்டார் பாரதிராஜா. ஏனெனில் சண்டை காட்சிகள் வைத்து படம் எடுத்த காலக்கட்டத்தில் சண்டைகளே இல்லாமல் படம் எடுப்பவராக பாரதிராஜா இருந்தார்.

அவரது முதல் படம் 16 வயதினிலே, தமிழ் சினிமாவில் நடிப்பில் பெரும் உச்சத்தை தொட்ட கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே அந்த படத்தில் நடித்திருப்பார். அப்போதே கமல்ஹாசன் ஒரு டாப் நடிகராகதான் இருந்தார். ஆனாலும் கூட அந்த படத்திற்காக கோவணம் கட்டிக்கொண்டு நடித்தார்.

அந்த காலக்கட்டத்தில் பெரும் நடிகர்களை வைத்து அப்படி ஒரு படத்தை எடுக்கவே தனி தைரியம் வேண்டும் என கூறுகிறார் பாரதிராஜா. இதுக்குறித்து அவர் கூறும்போது அந்த படம் ஓடுமா? என்பதில் எனக்கே சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும். அதன் பிறகு திரும்ப ஊருக்கு போய் விவசாயம் செய்தாலும் பரவாயில்லை என நினைத்தேன்.

அப்போது அந்த படத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 5 லட்ச ரூபாய். அந்த படத்தை எடுத்து முடித்த பிறகு கோவணம் கட்டிய கதாநாயகனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம் இருந்தது. படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவெல்லாம் நான் தூங்கவே இல்லை. ஆனால் மக்கள் படத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

அதனால்தான் எப்போதும் நான் பேசும்போது என் இனிய தமிழ் மக்களே என துவங்குவே. இவ்வாறு கூறியுள்ளார் பாரதிராஜா.

இதையும் படிங்க: அதிக சம்பளம் கேட்ட நடிகை; சரோஜாதேவிக்கு அடித்த லக்: அதிர்ஷ்டம் புகுந்து விளையாடிருக்கே!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top