விஜயோட ஃபிரண்ட்ஸ் பண்றதெல்லாம் வெளிய சொல்ல முடியாது!.. சீக்ரெட் சொன்ன பத்திரிக்கையாளர்..
தமிழ் சினிமாவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் இன்னொரு முகம் இருக்கும். படப்பிடிப்பு தளங்களில் நடப்பது, இசை வெளியீட்டு விழாவில் பேசுவது, பொது நிகழ்ச்சிகளில் பேசுவது இவைதான் பொதுவாக நாம் பார்க்கும் நட்சத்திரங்களின் முகங்களாக இருக்கும்.
ஆனால் அதை தாண்டி குடும்பம், நண்பர்கள் என்பது அவர்களது இன்னொரு முகமாக இருக்கும். அனைத்து நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பர்கள் இருப்பார்கள். உதாரணத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவின் நட்பு பட்டாளம் பலருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கலாம்.
சென்னை 28 திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அந்த நண்பர் பட்டியலில் இருப்பார்கள். அதே போல பெரும் பெரும் நடிகர்களுக்கும் நட்பு வட்டாரங்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு மிகவும் நம்பகமான ஆட்களையே நட்பு பட்டியலில் வைத்துக்கொள்வார்கள்.
விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள்:
பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தனன் ஒரு பேட்டியில் கூறும்போது நடிகர் விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் பலர் உள்ளனர். இந்த சினிமா சமயங்களில் நடக்கும் பிரச்சனைகள் இவற்றையெல்லாம் மறந்து அவர்கள் அரட்டை அடிப்பதற்கு இந்த நட்பு வட்டாரம் உதவிப்புரிகிறது.
அரட்டை அடிக்கும்போதும் சினிமாவில் நடக்கும் விஷயங்களை பற்றி பேசுவார்களா? எனக் கேட்டால் கண்டிப்பாக இல்லை. அரட்டை நேரங்களில் அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களை வெளியே சொல்லவே முடியாது. அதை வெளியே சொன்னால் தற்சமயம் அதுவே சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிவிடும் என கூறுகிறார் அந்தணன்.
விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் என கூறும்போது அதில் நடிகர் சிபி ராஜ், ஜீவா, இயக்குனர் அட்லீ, லோகேஷ் கனகராஜ் போன்றோர் இருப்பதாக கூறப்படுகிறது.