சாதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு வயசு ஒரு தடையல்ல....கீரவாணியைப் புகழ்ந்து தள்ளிய இசைப்புயல்..!
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்திற்கு இசை அமைப்பாளர் கீரவாணி. இவரது நாட்டு நாட்டுப் பாடலுக்குத் தற்போது ஆஸ்கர் விருது கிடைச்சிருக்கு. இதுக்காக ஒட்டுமொத்த இந்தியத்திரையுலகமே இவரைக் கொண்டாடிக்கிட்டு இருக்கு.
புதுப்புது அர்த்தங்கள் படத்தை இயக்கிய கே.பாலசந்தர் அந்தப் படத்தின் போது இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறொரு இசை அமைப்பாளரைத் தேடிக் கொண்டிருந்தார்.
அவருக்குக் கிடைத்தவர் தான் மரகதமணி. தெலுங்கில் கீரவாணி என்ற தனது சொந்தப் பெயரில் இசை அமைத்துக் கொண்டிருந்தார். இவருக்குத் தமிழில் அழகன் தான் முதல் படம்.
கே.பாலசந்தர் தன் மேல் வைத்த அபாரநம்பிக்கையை நனவாக்குவதற்காக அழகன் படத்தில் செமயாக இசை அமைத்திருந்தார் கீரவாணி. சங்கீத ஸ்வரங்கள் ஏலே கணக்கா...என்ற ஒரு பாடலே அதற்கு சாட்சி. என்ன ஒரு அருமையான மெலடி. இப்போது கேட்டாலும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.
அதேபோல அதே படத்தில் இடம்பெற்ற சாதி மல்லிப் பூச்சரமே என்ற பாடலையும் சொல்லலாம்.
அதே போல நீ பாதி நான் பாதி என்ற படத்திற்காக நிவேதா என்ற ஒற்றை வார்த்தையில் பாடல் முழுவதையும் கம்போஸ் பண்ணி அசத்தியிருந்தார் மரகதமணி. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பரமணியம் பாடியிருந்தார்.
அதே படத்தில் காலமுள்ள வரை என்ற சூப்பர்ஹிட் மெலடி பாடலும் இடம்பெற்றது. தொடர்ந்து இவரது இசையில் பாட்டொன்று கேட்டேன், சிவந்த மலர், சேவகன், வானமே எல்லை, ஜாதிமல்லி ஆகிய படங்களில் இசை அமைத்து அசத்தியுள்ளார்.
வானமே எல்லை படத்தில் வரும் சூப்பர்ஹிட்டான கம்பங்காடு பாடல் மரகதமணி, சித்ராவுடன் இணைந்து பாடியுள்ளார். 1997ல் கொண்டாட்டம் படத்திற்கும் இசை அமைத்து அசத்தியிருந்தார் கீரவாணி.
ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்திற்கும் மரகதமணி தான் இசை அமைப்பாளர். இந்தப் படத்தில் வரும் விழாமலே இருக்க முடியுமா என்ற பாடல் அப்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் செட்டாக இருந்தது.
2015ல் அனுஷ்காவின் நடிப்பில் வெளியான இஞ்சி இடுப்பழகி படத்திற்கும் இவர் தான் இசை அமைப்பாளர்.
நான் ஈ, மாவீரன், பாகுபலி ஆகிய படங்களுக்குப் பிரமாதமாக இசை அமைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவரது இசை உலகளவில் ஹிட்டானது. தற்போது இவரது வயது 61.
இவரைப் பற்றி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிடுகையில், கீரவாணி ஆல்மோஸ்ட் ரிட்டையர்டு ஆகலாம்னு நினைச்சிருந்த நேரத்தில் தான் 2015ல செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிச்சிருந்தாரு.
அதுக்கு அப்புறம் அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இன்னைக்கு ஆஸ்கர் வரைக்கும் நிக்கிறாரு. அதனால சாதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு வயசு ஒரு தடை அல்ல என்பதையும் இவர் நிரூபிச்சிருக்காரு.
2008ல் சிறந்த இசை அமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் வெளியான ஆங்கிலப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இந்த விருதைப் பெற்றார்.