எவளோ பெரிய இயக்குனர் அவர்.! கொஞ்சம் மரியாதை கொடுங்க A.R.ரகுமான் அவர்களே.!

by Manikandan |
எவளோ பெரிய இயக்குனர் அவர்.! கொஞ்சம் மரியாதை கொடுங்க A.R.ரகுமான் அவர்களே.!
X

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இசை கோர்ப்பு பணிகளை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கவனித்து வருகிறார். மணிரத்தினம் சென்னையில் படத்தின் எடிட்டிங் வேலைகளை கவனித்து வருகிறார். அதேபோல மற்ற வெளிநாடுகளில் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். அதையும் மணிரத்னம் கவனித்து வருகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் துபாயில் இருந்து கொண்டு பொன்னியின் செல்வன் இசை பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். மணிரத்னம் இங்கிருந்து அவரின் இசை பணிகளை கவனித்து வருகிறாராம்.

பொதுவாக மணிரத்னம் ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றும்போது ஒன்றாக இணைந்து பணியாற்றுவதே வழக்கம். தற்போது ஏ.ஆர்.ரகுமான் துபாயில் இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டி உள்ளதால் தற்போது அங்கிருந்து மணிரத்னத்தின் மேற்பார்வையில் பணியாற்றி வருகிறாராம்.

எவ்வளவு பெரிய இயக்குனர் பிரம்மாண்டமாக படம் எடுத்து வருகிறார், அதுவும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர். அவருக்கு நேரில் அவருடன் இணைந்து பணியாற்றினால் தான் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். எது எப்படியோ பாடல்கள் பின்னணி இசை நன்றாக வந்தால் போதும் என்று மணிரத்னம் விறுவிறுப்பாக வேலை செய்து வருகிறாராம்.

Next Story