Cinema History
மாப்ள அந்த சீட்ட போடாத மாப்ள!.. சிவாஜி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் எம்.எஸ்.வி போட்ட பாட்டு!..
பல கலைகள் ஒன்றிணைந்த ஒரு துறை என்பதால்தான் சினிமாவை பெரும் கலைத்துறை என்று எப்போதும் கூறுவார்கள். நடனம், நாடகம், இசை, கவிதை, எழுத்து என்று பல துறைகளும் ஒன்றிணைந்துதான் ஒரு திரைப்படம் அப்போது தமிழ் சினிமாவில் உருவானது.
இதனால் அப்போது சினிமாவில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்று பலரும் இருந்தனர். அப்போது இருந்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன். அப்போது பெரிய நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜியில் துவங்கி பல நடிகர்களின் படங்களுக்கு முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர் எம்.எஸ் விஸ்வநாதன்.
பெரும் இசைக்கலைஞர் என்பதால் எம்.எஸ்.வி சில சமயங்களில் அவருக்கு பிடித்த வகையில் இசையமைப்பார். அது இயக்குனருக்கும் கதாநாயகர்களுக்கும் பிடிக்கவில்லை என்றாலும் கூட அதை வலுக்கட்டாயமாக திரைப்படங்களில் வைப்பார்.
எம்.எஸ்.வி வைத்த பாடல்:
அப்படியான ஒரு சம்பவம் சிவாஜி கணேசனின் படத்திலும் நடந்தது. சிவாஜி கணேசன் நடித்து 1972 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பட்டிக்காடா பட்டணமா. இந்த திரைப்படத்திற்கு எம்.எஸ்.விதான் இசையமைத்தார். நடிகை ஜெயலலிதா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதில் சிவாஜிக்கு ஒரு பாடலை எம்.எஸ்.வி இசையமைக்கும் போது அந்த பாடல் சிவாஜி கணேசனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த பாடல் கிராமிய பாணியில் உள்ளது. இது மக்கள் மத்தியில் அவ்வளவாக சென்று சேராது எனவே வேறு ஒரு பாட்டை போடுங்கள் என்று கூறியுள்ளார் சிவாஜி. ஆனால் எம்.எஸ்.வி இதற்கு கொள்ளவில்லை. இந்த பாடல்தான் உங்கள் படத்தை தூக்கி நிறுத்த போகிறது என்று சிவாஜியிடம் சவால் விட்டுள்ளார் எம்.எஸ்.வி.
அந்தப் படத்தில் வரும் என்னடி ராக்கம்மா என்கிற பாடலுக்காகதான் இந்த சண்டை நடந்தது. ஆனால் படம் வெளியான பிறகு எம்.எஸ்.வி சொன்னது போலவே பட்டி தொட்டி எங்கும் அந்த படத்தைக் கொண்டு சேர்த்த பாடலாக என்னடி ராக்கம்மா பாடல் இருந்தது. இப்போது வரை பிரபலமாக உள்ள அந்த பாடல் படம் வந்த சமயத்தில் சிவாஜி கணேசனுக்கு பிடிக்காத பாடலாக இருந்துள்ளது.
இதையும் படிங்க: நடிச்சி முடிச்சாதான் சோறு.. மிஸ்கினால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை!.