Connect with us
ilayaraja

Cinema History

யப்பா என்ன ஸ்பீடு? பத்தே நிமிடத்தில் பாடல் ரெடி! அசத்திய வைரமுத்து – இளையராஜா கூட்டணி

சினிமா பாடல் ஒன்று பத்தே நிமிடத்தில் தயாரான அதிசய சம்பவம் ஒன்று தமிழ்த்திரை உலகில் அரங்கேறியுள்ளது. அதைப் பற்றிப் பார்ப்போம்.

இயக்குனர் பாரதிராஜா இளையராஜாக்கிட்ட சொல்றாரு. நாளைக்குக் காலைல முட்டத்துல சூட்டிங். ரெண்டு நாள் ஷெடுல்க்கு என்ன செய்றதுன்னு தெரில. அதனால ஒரு பாட்டை எடுத்துக்கறேன். அவசர அவசரமா ஒரு பாட்டை எடுத்து விடுப்பான்னாரு.

Karthick

என்னப்பா அவசரமா கேக்குற?ன்னு இளையராஜா கேட்க… உன்னால முடியாதா… நீ போட்டுக் கொடுப்பா..ன்னாரு பாரதிராஜா. சொன்ன உடனே வைரமுத்து ஒரு பாட்டை எழுதுன்னாரு. பாட்ட எழுதச் சொல்லிட்டீங்க… என்ன சுச்சிவேஷன்னு கேட்டாரு. ஒரு காதல் பாட்டுதான். பொதுவா எழுதுங்களேன்னாரு. உடனே இவர் பிரசாத் ஸடூடியோல உட்கார்ந்து பத்து நிமிஷத்துல பாட்டை எழுதிக் கொடுத்துட்டாரு.

இளையராஜாவும், சசிரேகாவும் சேர்ந்து பாட்டைப் பாட உடனே டீமோடு சேர்ந்து ரெக்கார்டு பண்ணிட்டாங்க. இப்ப கேட்டாலும் அந்தப் பாட்டு மனசுக்குள்ள ஒரு காதலைப் பூத்து விடும்.

இந்தப் பாட்டுல ஆரம்பத்துல காதலும், பின்னாடி சோகமும் கலந்து இருக்கும். இந்தப் பாடலில் இசையைத் தனியாகப் பிரித்தால் இசையை சொல்லிக் கொடுக்கும். வரிகளைத் தனியாகப் பிரித்தால் அது ஒரு அழகான காதல் கவிதை.

என்ன பாட்டுன்னு கேட்கலாம். அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரக்கூடிய ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ பாடல்தான். இந்தப் பாட்டுல இளையராஜா சுத்த தன்யாசி ராகத்துல பாடிருப்பாரு. இந்தப் பாட்டைப் பத்து நிமிடம் கேட்டால் போதும். சுத்த தன்யாசி ராகத்தைப் பிடித்து விடலாம்.

Radha

இந்தப் பாடலில் இளையராஜா மிருதங்கத்தின் சுதியை தக்கத்தோம் தக்கதோம் என்று சொல்லிக்கொண்டு போய்க்கிட்டே இருப்பார். அவ்வளவு அழகா இருக்கும். இந்தப் பாடலில் என்ன சிறப்புன்னா ஒரு நேரம் வேகமா போகும். இன்னொரு நேரம் மெதுவா போகும்.

இந்தப் பாடலில் கடைசி வரியில் வைரமுத்து நெஞ்சைத் தொட்டிருப்பார். எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் கொடுக்கும் முத்தம்…. உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்…! என்ன ஒரு அழகான வரிகள். காதல் கைகூட வில்லை என்றால் அந்த உயிர் உருகும் சத்தம் சம்பந்தப்பட்ட காதலருக்கேக் கேட்கும்.

இந்தப் பாடல் அப்போது வானொலிகளில் ஒலிக்காத நாள்களே இல்லை. காதல் ரசம் சொட்டச் சொட்ட எடுத்துள்ள இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

google news
Continue Reading

More in Cinema History

To Top