Categories: latest news

கம்பேக் கொடுக்கும் நாயகி…ஏஏஏ படத்தில் நடிக்க இருப்பது இவங்க தானா? கொண்டாட்டம் தான்…

AAA Movie: அட்லீ இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த மாஸ் ஹிட் திரைப்படத்தில் சில நாட்களாக சறுக்கலில் இருந்த நடிகை இணைய இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இதை கேட்ட ரசிகர்களே செம குஷியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ராஜாராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆரம்பம் முதலில் அவருக்கு நல்ல நேரம் தான். முதல் படமே மிகப்பெரிய ஹிட். அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று படங்கள் விஜயுடன் இணைந்து பணியாற்றினார்.

இதையும் படிங்க: அசால்ட் பண்ணி அடிச்சி தூக்கிய சத்யராஜ்!.. அசந்து போன விஜயகாந்த்!. அப்படி என்னதான் நடந்துச்சு?.

எல்லா படங்களுமே இன்னொரு பிரபல படத்தின் காப்பி என கிசுகிசுக்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே  இருந்தது. ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்தார். பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு வந்தது.

ஜவான் படத்தில் ஷாருக்கானை இயக்கினார். அப்படம் தமிழ் ரசிகர்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டாலும் இந்தி ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றது. பதான் திரைப்படத்திற்கு பின்னர் ஷாருக்கான் கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக ஜவான் அமைந்தது. இதனால் இந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களிடம் அட்லீக்கு மவுஸ் அதிகரித்துவிட்டது. 

அந்த வகையில் அவரின் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இதனால் இப்படத்தினை ஏஏஏ என இணையத்தில் செல்ல பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். இப்படத்தில் நாயகியாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: விஜயகாந்தை அப்படி திட்டினேன்!. ஆனா அங்க போகும்போது!.. கண் கலங்கி நெகிழும் பிரபலம்!…

இந்நிலையில் தற்போது சமந்தாவிடமும் படக்குழு பேச்சுவார்த்தையில் இணைந்து இருக்கிறதாம். சமந்தா இந்த படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனமும் அதீத ஆர்வம் காட்டுகிறதாம். நாக சைதன்யாவுடனான விவகாரத்து, மியோசிட்டஸ் நோய் பாதிப்பு என தொடர்ந்து சமந்தாவின் கேரியர் சறுக்கலிலே இருக்கிறது.

அவர் நடிப்பில் வெளியான யசோதா, குஷி உள்ளிட்ட படங்களும் தோல்வியில் தான் அமைந்தது. அந்தவகையில் இந்த படத்தில் சமந்தா நடித்தால் அது அவரின் கேரியருக்கு மீண்டும் ஒரு உயரத்தினை கொடுக்கும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் நிலவுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

7 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

17 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago