டப்பிங் பேசும் போதே உயிரிழந்த மாரிமுத்து!.. இப்போ யாரு தெரியுமா ஆதி குணசேகரனுக்கு டப்பிங் பேசுறது!..

by Saranya M |   ( Updated:2023-09-12 13:26:48  )
டப்பிங் பேசும் போதே உயிரிழந்த மாரிமுத்து!.. இப்போ யாரு தெரியுமா ஆதி குணசேகரனுக்கு டப்பிங் பேசுறது!..
X

சன் டிவி சீரியல் சமீபகாலமாக டிஆர்பியில் இடம் பிடிக்காமல் இருந்து வந்த நிலையில் விஜய் டிவி சீரியல்கள், ஜீ தமிழ் சீரியல்கள் டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வந்தன.

அந்த நிலையை மாற்ற இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் வெளியான சில வாரங்களிலேயே டிஆர்பியில் இடம் பிடித்து விட்டது. தொடர்ந்து பல மாதங்களாக டிஆர்பி யில் முதலிடத்தை எதிர்நீச்சல் சீரியல் தக்கவைக்க முக்கிய காரணமே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான்.

இதையும் படிங்க: ரஜினிக்கு வெண்ணெய்!.. விஜய்க்கு மட்டும் சுண்ணாம்பா.. கத்தரி போடும் சென்சார்.. லியோ தலை தப்புமா?..

ஆனால் சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மாரிமுத்து இறந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்தது. மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்த இறுதிச்சடங்கு நடைபெற்றது.

அடுத்த ஆதி குணசேகரன் ஆக நடிக்கப் போவது யார்? என்கிற கேள்வி ஒரு பக்கம் உள்ள நிலையில், ஏற்கனவே மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்துக் கொண்டிருப்பவர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தலைவர் 171!. சன் பிக்சர்ஸ் மீது செம கடுப்பில் லோகேஷ் கனகராஜ்!.. இப்படி பண்ணலாமா?!..

உதவி இயக்குனராக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் வெங்கட் ஜனா என்பவர் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனுக்கு லேட்டஸ்ட்டாக டப்பிங் பேசியவர். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வெங்கட் ஜனா இயக்குனர் திருச்செல்வம் தனது மதுரை ஸ்லாங்கை பார்த்து ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்க சொன்னார்.

அந்த எபிசோடுக்கு டப்பிங் கொடுத்துக் கொண்டிருக்கும் போதுதான் மாரடைப்பு ஏற்பட்டு நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து காலமானார். அவர் ஒரு சீன் பேசி விட்டார். அதற்கு அடுத்த சீனை அவருக்கு பதில் நான் பேசப் போகிறேன் என்பதை நினைத்து ரொம்பவே டிஸ்டர்ப் ஆயிட்டேன். கண்களில் எல்லாம் நீர்வழிய ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசியுள்ளேன் என வெங்கட் ஜனா தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ரஹ்மான் நிகழ்ச்சிக்கு அதிக டிக்கெட் வித்ததுக்கு காரணம் இதுதானாம்!.. இப்படியா பண்ணுவீங்க!…

மாரிமுத்து சார் மாதிரி பேசுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அவர் ரொம்பவே இயல்பாக, அடிக்கடி இருமிக் கொண்டு எதார்த்தமாக பேசக் கூடியவர். அவரது பேச்சில் கோபம் மற்றும் நக்கல் தொனி கலந்து இருக்கும். அதை எல்லாம் சரியாக உள்வாங்கி பேச வேண்டும். இயக்குனர் திருச்செல்வம் சொல்லிக் கொடுத்தபடி டப்பிங் பேசி விட்டு வந்தேன். ஆனால் எனக்கே டவுட் ஆகத்தான் இருந்தது.

சரியா பேசி இருக்கோமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது. எனது நண்பர் எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து பார்க்கக் கூடியவர். அவருக்கு போன் போட்டு கேட்டேன் இன்றைய எபிசோடு எப்படி இருந்தது என கேட்டேன், வழக்கம்போல நல்லாத்தானே இருந்தது என்றார். ஏதாவது மாறுதல் தெரிகிறதா என்று கேட்டேன் ஏதும் தெரியலையே என அவர் சொன்ன பிறகு தான் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளோம் என்ற எண்ணமே எனக்கு வந்தது என இயக்குனர் வெங்கட் குணா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story