Connect with us

Cinema News

கோலிவுட்டின் அடுத்த தனுஷ் – ஐஸ்வர்யாவான ஆதிக் ரவிசந்திரன் – ஐஸ்வர்யா.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!

Aadhik Ravichandran: தமிழ் சினிமாவில் சமீபத்திய ஹிட் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிசந்திரன் திருமணம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிசந்திரன். முதல் படம் பெரிய அளவில் வசூல் படைக்கவில்லை என்றாலும் யாரு இந்த இயக்குனர் என திரும்பி பார்க்க வைத்தவர். இதை தொடர்ந்து அவர் இயக்கிய அஅஅ படமும், பகீராவும் சரியாக ஓடவில்லை.

இதையும் படிங்க: கேண்ட்டீனை பிரச்னை ஓவர்..! அடுத்து சைக்கோ எண்ட்ரி தான? மாலினி, கணேஷ் தொல்லை ஆரம்பம்..!

கிட்டத்தட்ட அடல்ட் இயக்குனராக அறியப்பட்டவர் விஷாலை வைத்து மார்க் ஆண்டனியை இயக்கினார். அந்த படமும் அப்படி தான் இருக்கும் என பலரும் நினைக்க ட்ரைலரிலே மிரட்டினார். படம் ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டது. இதன் வெற்றிக்கு எஸ்.ஜே.சூர்யா மிகப்பெரிய காரணம்.

தற்போது ஆதிக் ரவிசந்திரன் அஜித்தை இயக்கும் பணிகளில் இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கும், நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கோலாகலமாக திருமணம் முடிந்து இருக்கிறது. இருவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரூமை விட்டு கொடுத்த அண்ணாமலை… கடைசியில் அவரையே குறை சொன்ன ஸ்ருதி..!

ஐஸ்வர்யா விக்ரம் பிரபுவின் சகோதரி. இவருக்கும் பிரபுவின் சகோதரி மகன் குணால் என்பவரை 2009ல் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட மன கசப்பால் அவரிடம் விவகாரத்து வாங்கி விட்டு இந்தியா திரும்பினார்.

இங்கு பேக்கிங் பிசினஸ் செய்து வந்தார். ஆதிக் ரவிசந்திரனுக்கு 32 வயது ஆகும் நிலையில் ஐஸ்வர்யாவுக்கு அவரை விட வயது அதிகம் தான் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது. அப்போ அடுத்த தனுஷ்-ஐஸ்வர்யாவா இவங்க!

google news
Continue Reading

More in Cinema News

To Top