எதிர்நீச்சல் சீரியல்: ரீஎண்ட்ரி கொடுத்த ஆதிகுணசேகரன்…கோபத்தில் கொதித்த நந்தினி…

Published on: October 4, 2023
ethineechal serial
---Advertisement---

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னணியில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல். இதில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்து இறந்தபின் அடுத்ததாக அந்த கதாபாத்திரத்திற்கு யார் வருவார் எனும் கேள்வி இருந்தது. பல நட்சத்திரங்கள் இவருக்கு பதிலாக நடிக்க போவதாக கருத்துகள் உலாவின.

இந்நிலையில் இன்று ஆதிகுணசேகரனாக வேலராம மூர்த்தி எண்ட்ரீ கொடுத்துள்ளார். சக்தியும் ஜனனியும் கதிர் மற்றும் ஞானத்தின் மீது போலிஸில் புகார் கொடுக்க அவர்கள் இருவரையும் போலிசார் கைது செய்கிறார்கள். பின் அவர்களிடம் விசாரிக்கும்பொழுது அவர்கள் ஏற்கனவே பார்த்த சாமியார் இருந்த இடத்திற்கு அழைத்து செல்கின்றனர்.

இதையும் வாசிங்க:ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

ஆனாலும் போலிசாருக்கு அவர்கள் மேல் இருந்த சந்தேகம் குறையவில்லை. அதனால் அவர்களை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று போலிசார் அவர்களை தாக்குகின்றனர். அந்த சமயம் ஆதி குணசேகரன் காரில் இருந்து இறங்கி வந்து தனது தம்பிகளை போலிஸிடம் இருந்து காப்பாற்றுகிறார். அதே சமயம் சக்தியின் வீட்டில் நந்தினிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

அப்போது மாமியார் மருமகள்களை வீட்டை விட்டு வெளியே போங்க..நாங்க பாத்துகிறோம் என கூறுகிறார். அதற்கு நந்தினி அப்படியெல்லாம் வெளியே போக முடியாது..என் புருஷன் வந்து என்னை போக சொல்லட்டும்..அவனிடம் ஒரு காட்டு காட்டிவிட்டுதான் செல்வேன்.. என கூறுகிறார். பின் நந்தினி தன் அப்பாவிடம் அவங்க அண்ணன கூட்டிட்டு வந்து ரொம்ப பேசுவாங்க…ரோஷம் வந்து என் பெண்ணை கூட்டிட்டு போறேனு மட்டும் சொல்லிடாதீங்க..நான் இந்த வீட்டுல பேச வேண்டியது நிறைய இருக்கு.. என கூறுகிறார்.

இதையும் வாசிங்க:லியோ டிரெய்லருக்கு வந்த ஆப்பு!.. ஓவர் ஆட்டம் போட்டா இப்படித்தான்!. அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!.

பின் தான் இந்த வீட்டில் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் தனது தந்தையிடம் கூறி அழுகிறார். இந்த அம்மாவிற்கு நாங்க தினமும் குளிச்சிட்டுதான் இந்த மாடிபடியைவிட்டு இறங்கணும். இல்லனா இந்த சாமி இங்க இல்லாம போய்டுமாம். ஆனா இவங்க பையன் மட்டும் அந்த சாமி முன்னாடி இருந்து குடிப்பான்…அப்போ மட்டும் இந்த மீனாட்சி சிரிச்சிட்டு இருப்பாளாம்… என தனது ஆதங்கத்தை தனது தந்தையிடம் கொட்டி தீர்த்து விடுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிவடைகிறது. ஆதி குணசேகரன் நாளை வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தால் என்ன நடக்கும் என்பது தெரியும்.

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.