Connect with us
vijay and bayilvan

Cinema News

ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

Actor Vijay: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம்தான் தளபதி68. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாக்‌ஷி செளத்ரி நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். தந்தை விஜய்க்கு சினேகா ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் இப்படத்தினை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.

இதையும் படிங்க:அடேய் யார்டா நீங்கலாம்!.. அரை டவுசரில் அஜித், ரஜினி.. இன்னும் என்னவெல்லாம் கொடுமையை பார்க்கணுமோ!..

இப்படத்தின் பூஜை அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் இந்த விழாவிற்கு விஜய் எந்த ஒரு சினிமா நட்சத்திரங்களையும் அழைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் எந்த ஒரு பத்திரைக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இது குறித்து திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி மறைத்து அனைத்தையும் செய்யும் அளவிற்கு என்ன நடந்து விட்டது எனவும் இப்படத்தில் பணியாற்றும் இயக்குனர், நடிகர், நடிகைகள் அனைவரையும் படத்தினை பற்றிய எந்த ஒரு தகவல்களையும் வெளியே பரப்ப கூடாது என நிபந்தனை போடும் அளவிற்கு என்ன இருக்கிறது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அதுக்கு மொத்தமா நோ சொன்ன விஜய்!.. தளபதி தரிசனமே அப்போ இனிமேல் கிடையாதா?.. என்ன இப்படி ஆகிடுச்சு!..

மேலும் ஊடகங்கள் இல்லாமல் எந்தவித புரோமோஷனும் இல்லாமல் ஜெயித்து விடலாம் என நினைக்கும் விஜய் இந்த ஊடகத்தினாலேயே இந்த நிலைமையில் உயர்ந்துள்ளார் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்கள் நினைத்தால் எந்தவொரு தகவல்களையும் எப்படியேனும் தெரிந்து கொள்வோம் என கூறியுள்ளார்.

அதனால் உங்களை வளர்த்துவிட்ட ஊடகங்களை என்றும் மறவாதீர்கள் எனவும் கூறியுள்ளார். சிவாஜி, ரஜினி, கமல் என அனைவரும் தங்களது படத்தினை பற்றிய அறிவிப்பினை ஓபனாக வெளிவிடும் நிலையில் நீங்கள் இவ்வாறு செய்வது நன்றாக இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இப்பேச்சு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க:‘ரத்தம்’ திரைப்படம் அந்த மாதிரி கதையா?.. வேற லெவலில் மிரட்ட வரும் விஜய் ஆண்டனி

google news
Continue Reading

More in Cinema News

To Top