‘ரத்தம்’ திரைப்படம் அந்த மாதிரி கதையா?.. வேற லெவலில் மிரட்ட வரும் விஜய் ஆண்டனி

0
341
anto
anto

Raththam Movie: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக தனக்கென தனி பாணியில் மிரட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக தனது கெரியரை ஆரம்பித்த விஜய் ஆண்டனி தனது இசையால் இளைஞர்களை ஆட்டம் போட வைத்தார்.

அனிருத், ரஹ்மான், இசைஞானி இவர்களுக்கு என்று ஒரு தனி டெம்ப்ளேட் இருக்கிறது. ஆனால் விஜய் ஆண்டனியின் இசையில் ஒரு வித்தியாசமான பீட்டை பார்க்கமுடியும். இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை உட்கார விடாது. அந்தளவுக்கு குத்துப் பாடல்களாக போட்டிருப்பார்.

இதையும் படிங்க: நண்டு சுண்டெல்லாம் விஜய்க்கு ஹீரோயின்! ‘தளபதி68’ல் மீனாட்சி சௌத்ரி உள்ளே வந்தது எப்படி?

நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல த்ரில்லரான கதையில் நடித்து மக்களை ஈர்த்தார். ஒரு நடிகராக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில் இவரின் நடிப்பில் வரும் 6 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ரத்தம். அந்தப் படத்தின் ப்ரோமோஷன் தான் மகள் இறந்த பிறகு கலந்து  கொண்ட முதல் நிகழ்ச்சியாகும். அந்த விழாவிற்கு தனது இரண்டாவது மகளுடன் கலந்து கொண்டார் விஜய் ஆண்டனி.

இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..

இந்த ரத்தம் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படமாக வரவிருக்கிறது என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறினார்.படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றும் ஊடகவியலாளர்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்றும் முழுக்க முழுக்க பத்திரிக்கையாளர்கள் பெருமைப்படும் அளவிற்கு இந்தப் படம் அமையும் என தனஞ்செயன் கூறினார்.

இது சம்பந்தமான கதையில் ஏற்கனவே ஜீவா நடிப்பில் கோ என்ற படம் வெளியானது. ஆனால் அந்த கோ படத்தை தாண்டியும் இந்த ரத்தம் திரைப்படம்  மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தனஞ்செயன் கூறினார்.

இதையும் படிங்க: 500 ரூபா மட்டும் சம்பளமாக வாங்கி விஜய் நடித்த திரைப்படம்!. இப்படியெல்லாம் நடந்திருக்கா!..

google news