
Cinema News
அடேய் யார்டா நீங்கலாம்!.. அரை டவுசரில் அஜித், ரஜினி.. இன்னும் என்னவெல்லாம் கொடுமையை பார்க்கணுமோ!..
விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடிகர் ரஜினிகாந்தும் நடிக்கப் போவதாகவும் அஜர்பைஜானில் அவர்கள் எப்படி இருக்காங்கன்னு பாருங்க என நெட்டிசன்கள் கிளப்பியுள்ள ஏஐ அலப்பறைகள் ரசிகர்களை அடக்க முடியாத சிரிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அஜர்பைஜானில் வெக்கேஷன் மோடில் அரை டவுசரை அணிந்து கொண்டு சட்டையை பனியன் அணியாமல் திறந்த மேனியாக விடப்பட்டுள்ளது போல உருவாக்கப்பட்ட ஏஐ போட்டோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 4ம் தேதி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் அதிரடியாக காஸ்டிங் அப்டேட்களுடன் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..
ஜெய்பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 170 படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் அந்த படத்தில் இணைந்துள்ளனர்.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து எந்தவொரு அப்டேட்டையும் வெளியிடவில்லை என்றாலும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் அஜர்பைஜானில் டூர் அடிப்பது போல போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐயோ காத்தடிச்சாலே மானம் போயிடுமே!. ஏடாகூடமான உடையில் ஐஸ்வர்யா லட்சுமி…
இந்நிலையில், அஜித் குமார் அரை டவுசருடன் செம ஃபிட்டான பாடியுடன் இருப்பது போல உருவாக்கப்பட்ட ஏஐ மேஜிக் போட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன. அதே போல விடாமுயற்சி படத்தில் ரஜினிகாந்தும் இணைந்து விட்டார் என புரளியை கிளப்பி அவரையும் அந்த கோலத்தில் நிற்க வைத்துள்ளனர்.
விஜய் ரசிகர்கள் தான் இப்படியொரு மோசமான ஏஐ எடிட்டை செய்து அசிங்கப்படுத்தி வருகிறார்களா? என்கிற பேச்சும் அடிபட்டு வருகிறது. ஆனால், இந்த லுக்கே நல்லா தான் இருக்கு என ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.