அதுக்கு மொத்தமா நோ சொன்ன விஜய்!.. தளபதி தரிசனமே அப்போ இனிமேல் கிடையாதா?.. என்ன இப்படி ஆகிடுச்சு!..
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அக்டோபர் 5ம் தேதி லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் அந்த டிரைலர் எங்கே எப்படி ரிலீஸ் ஆகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடந்த போகிறோம் என்றும் மதுரையில் மாநாடு செய்யப்போகிறோம் என்றும் ஏகப்பட்ட அலப்பறைகள் செய்தனர்.
இதையும் படிங்க:‘ரத்தம்’ திரைப்படம் அந்த மாதிரி கதையா?.. வேற லெவலில் மிரட்ட வரும் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் மாணவர்களுக்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில், அதைவிட சிறப்பாக லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் கூட ஆடியோ லாஞ்ச் நடத்த முடியாத நிலை உருவாகிவிட்டது.
இந்நிலையில், லியோ படத்தின் டிரைலர் கேரளா அல்லது மும்பையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியுடன் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், சன் டிவி யூடியூப் சேனலில் மட்டுமே லியோ டிரைலர் வெளியிடப்படும் என்கிற அறிவிப்பு தற்போது வெளியானது.
இதையும் படிங்க: நண்டு சுண்டெல்லாம் விஜய்க்கு ஹீரோயின்! ‘தளபதி68’ல் மீனாட்சி சௌத்ரி உள்ளே வந்தது எப்படி?
இனிமேல் நடிகர் விஜய் எந்தவொரு ப்ரோமோஷன் கலந்து கொள்ள மாட்டாரா என்கிற கேள்வியை இது பலமாக எழுப்பியுள்ளது. லியோ டிரைலர் வெறுமனே சன் டிவி யூடியூப் சேனல் மட்டும் ரிலீஸ் ஆகப்போகும் அறிவிப்பு விஜய் ரசிகர்களை பயங்கர சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேசமயம் லியோ படத்தின் ட்ரெயிலர் தாறுமாறு இருக்கும் அதன்மூலமே தளபதி தரிசனத்தை பார்த்துக் கொள்கிறோம் என ரசிகர்கள் மனதைத் தேற்றி வருகின்றனர்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms