என்னது ஐஸ்வர்யா ராய் டைவர்ஸ் பண்ண போறாங்களா..? அபிஷேக் பச்சன் செஞ்ச வேலை அப்படி..!

by ramya suresh |   ( Updated:2024-07-19 07:40:43  )
என்னது ஐஸ்வர்யா ராய் டைவர்ஸ் பண்ண போறாங்களா..? அபிஷேக் பச்சன் செஞ்ச வேலை அப்படி..!
X

ஐஸ்வர்யா ராய் தனது காதல் கணவர் அபிஷேக் பர்ச்சனை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றது.

இந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கிய ஐவர் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தான் இவரின் முதல் திரைப்படம். அதையடுத்து தமிழில் சங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், ராஜு மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பின்னர் எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழை காட்டிலும் பாலிவுடில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைதள பக்கங்களில் வதந்திகள் பரவி வந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் தனது மகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர், பின்னர் ஆர்ச்சிஸ் என்ற netflix படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்கும் ஒன்றாக தான் கலந்து கொண்டார்கள். ஆனால் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் திருமண விழாவிற்கு இவர்கள் தனித்தனியாக வருகை கொடுத்திருந்தார்கள். ஐஸ்வர்யா ராயும் அவரது மகளும் ஒன்றாக வந்திருந்த நிலையில், அபிஷேக் பச்சன் தனது தந்தை அமிதாப்பச்சன் மற்றும் தாயாருடன் வந்திருந்தார்.

இவர்கள் தனித்தனியாக வந்ததால் பலரும் இவர்கள் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறி வந்தார்கள். இதெல்லாம் வதந்தி தான் என்று பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அபிஷேக் பச்சன் செய்த ஒரு செயல் ரசிகர்களிடையே மேலும் சந்தேகத்தை கிளப்பி இருக்கின்றது. விவாகரத்து குறித்து எழுத்தாளர் ஹீனா கண்டேவால் எழுதிய பதிவு ஒன்றுக்கு அபிஷேக் பச்சன் லைக் போட்டு இருக்கின்றார்.

அதாவது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதற்கு பிறகு 50 வயதை கடந்த தம்பதியினர் விவாகரத்து செய்து கொள்வதற்கு பெயர் 'கிரே டைவர்ஸ்' ஆகும். உலகம் முழுவதும் தற்போது இது ட்ரெண்டாகி வருகின்றது. குழந்தைகளுக்காக வாழ்க்கையை சகித்துக் கொண்டு வாழும் தம்பதிகள் அவர்கள் வளர்ந்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தனித்தனியாக பிரிந்து செல்வது தான் கிரே டைவர்ஸ்.

இந்த போஸ்ட் ஒன்றுக்கு அமிதாபச்சன் லைக் போட்டுள்ளதால் மீண்டும் விவாகரத்து பஞ்சாயத்து பூதாகரமாக வெடித்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அமிதாப்பச்சனும் ஐஸ்வர்யா ராயும் சமீப நாட்களாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் இருவரும் சேர்ந்து இருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story