இயக்குனர்கள் நடிகர்களாக மாறுவது என்பது சமீப காலமாகவே திரையுலகில் அதிகரித்துவிட்டது. சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பல இயக்குனர்கள் சினிமாவில் நடிக்க வந்து விட்டார்கள்.
கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூட இப்போது நடிகராக மாறிவிட்டார்.. அவரின் நடிப்பில் வெளியான லவ் டுடே , டியூட் ஆகிய இரண்டு படங்களும் வசூலில் சக்கை போடு போட்டது.
இந்த வரிசையில் இயக்குனராக இருந்து நடிகராக மாறியிருப்பவர்தான் அபிஷன் ஜீவிந்த்.. சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களை வைத்து இவர் இயக்கிய டூரிஸ்ட் பேமிலி திரைப்பபடம் பாராட்டைப் பெற்றது. மிகவும் குறைவான பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றது.. அதோடு சிறந்த படம் என்கிற விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில்தான் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் வித் லவ் என்கிற படம் மூலம் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக மாறியிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் கூட இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இந்த படம் தொடர்பான புரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது.. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அபிஷன் ஜீவிந்த் ‘என்னை சௌந்தர்யா மேடம் ஹீரோவாக நடிக்க கூப்பிட்டதும் நான் தயங்கினேன்.. எனக்கு ஹீரோ செட் ஆகுமா?.. அதுவும் அனஸ்வரா ராஜனுக்கு அருகில் நின்றால் நான் எப்படி இருப்பேன்?.. என்னை கல்லால் அடிப்பார்களா? என்றெல்லாம் யோசித்தேன்.
அனால், ரஜினி சார் சந்தித்தபோது ‘நீங்க ஹீரோ மெட்டீரியல்’ என்று சொன்னார். அந்த நிமிடமே என்னிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை எல்லாம் போய்விட்டது’ என்று பேசியிருக்கிறார்.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…