சூட்டிங் ஸ்பாட்டில் கமல் செய்த கலாட்டா!… போட்டோ எடுக்கறதுக்குள்ள உதவியாளர் பட்ட பாட்டைப் பாருங்க!

Published on: May 27, 2024
Kamal
---Advertisement---

தமிழ்த்திரை உலகில் பிரபலங்களைப் பற்றிய சில விஷயங்கள் ஒரு சிலர் சொல்லக் கேட்க சுவாரசியமாக இருக்கும். அப்படி ஒரு சுவாரசியமான விஷயத்தை இந்தியன் 2வில் நடித்துக் கொண்டு இருக்கும் ராஜா ராணி பாண்டியன் இப்படி சொல்கிறார். இவர் ராஜா ராணி, ஜெய் பீம், பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க… கொடூர மந்திரவாதி வேடம் போட்டே கல்லா கட்டியவர்… நடிப்பை எங்கிருந்து சுட்டார் தெரியுமா?

ஸ்டில்ஸ் ரவியிடம் உதவியாளராக இருந்தவர் ராஜா ராணி பாண்டியன். இவர் சினிமாவில் படிப்படியாக குணச்சித்திர வேடங்களில் தலைகாட்டி வந்தார். இப்போது இந்தியன் 2 படத்திலும் நடித்துவிட்டார். இதுபற்றி இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இயக்குனர் ஷங்கர் சாரின் இந்தியன் 2 படத்தில் எனக்கு ஒரு பெண்ணுக்கு அப்பா கேரக்டர். முக்கியமான ஒரு பாத்திரமாக இது இடம்பெறும் என்கிறார்

இது எனக்கு எப்படி கிடைச்சதுன்னா லயோலா காலேஜ்ல படிச்ச மாணவன் அநீதின்னு ஒரு குறும்படம் எடுத்தான். அதுல நான் நடிச்சிருக்கேன். அதை ஷங்கர் சார்ட்ட போட்டுக் காட்டினான். அதைப் பார்த்துட்டு அந்தப் பையனுக்கும் உதவியாளர் வாய்ப்பு கொடுத்தாரு. அதுல நடிச்ச எனக்கும் கேரக்டர் கொடுத்தாரு. இது எனக்குக் கிடைச்ச பெருமை.

Rajarani Pandiyan
Rajarani Pandiyan

உன்னால் முடியும் தம்பி படத்துக்கு நான் உதவியாளரா இருந்தேன். அப்போ ஷேக் ஆகாம இருந்தால் தான் படம் நல்லா வரும்னு சொன்னேன். அப்போ கமல் சார் வேணும்னே கையை அப்படியேத் தூக்குவாரு. ‘சார் கையைத் தூக்காதீங்க. ஷேக் ஆகுது’ன்னு சொல்வேன்.

‘நீ ஒழுங்கா எடு’ன்னு கலாட்டா பண்ணிக்கிட்டே இருப்பாரு. ‘கமல் சார் தான் பிலிம் வேஸ்ட் பண்ணாரு’ன்னு சொன்னேன். ‘அது எப்படி பண்ணுவாரு?’ன்னு டைரக்டர் சொல்வார். ஆனா அதுதான் உண்மை. நாளைய இயக்குனர் கலைஞர் டிவியில போட்டாங்க. அதுக்கு ஜட்ஜ்மெண்ட் பாலசந்தரும், கமல்சாரும் தான். நான் இயக்கிய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற படம் செலக்ட் ஆனது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.