விஜயகாந்த் அதை யாரிடமும் சொன்னதே இல்லை!.. அவர் போல ஒரு மனிதர்!.. உருகும் பிரபலம்....
விஜயகாந்த் ஒரு கருப்பு எம்ஜிஆர் என திரையுலகினர் புகழ்வதுண்டு. அவர் கொடை வள்ளல் எம்ஜிஆரைப் போல கஷ்டம்னு யார் வந்தாலும் சளைக்காமல் உதவிகளை வாரி வழங்குவார். அவர் அலுவலகத்தில் கூட எப்போதும் அணையா அடுப்பு எரிந்து கொண்டே இருக்குமாம்.
அங்கு போய் அவரை யார் முதலில் பார்ப்பதற்கு வந்தாலும் சாப்பிடச் சொல்லி விட்டுத்தான் பார்ப்பாராம். அத்தகைய உயர்ந்த குணங்களைக் கொண்டவர் விஜயகாந்த் என்பதால் தான் அவர் மறைந்தாலும் கூட மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.
ஒருவர் எவ்வளவு உயர்ந்த குணம் கொண்ட மனிதர் என்பது அவர் இறந்தவுடன் அவருக்கு வரும் கூட்டத்தை வைத்தேக் கண்டு பிடித்துவிடலாம். அந்த வகையில் விஜயகாந்த் எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதர் என்பது நமக்கெல்லாம் தெரியும்.
நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த நாகேஷின் மகன் நடிகர் ஆனந்த் பாபு கேப்டன் விஜயகாந்த் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...
கேப்டன் விஜயகாந்த் நடித்த படத்தோட சூட்டிங்கிற்கு அருகில் தான் ஆனந்தபாபு படத்தின் சூட்டிங்கும் நடந்தது. அப்போ ஆனந்த்பாபு அவரை சந்தித்து சில விஷயங்களைப் பற்றி பேசுவாராம். கேப்டனிடம் அப்போது வந்து ஏதாவது உதவின்னு கேட்டா உடனே செய்து விடுவாராம். உதவியாளரை அழைத்து என்ன தேவையோ அதையும் அந்த இடத்திற்கே வரவழைத்து உதவி கேட்டவர்களிடமே கொடுத்து விடுவாராம். அதே போல அவர் செய்த உதவியை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாராம்.
விஜயகாந்த் மாதிரி ஒரு பெரிய ஜாம்பவானைப் பார்த்ததில்லை என்கிறார் ஆனந்த்பாபு. ஒரு விஷயத்தைத் துணிச்சலுடன் செய்து முடிப்பவர். அரசியலும் தாண்டி நடிகர் சங்கத்திலும் எல்லோருக்கும் முன்னோடி. எல்லோரையும் அரவணைத்துப் போகும் நபர். திரைத்துறையிலும் இவர் ஜாம்பவான் தான். அவர் செய்த தான தர்மத்தை இதுவரை அவர் வெளியே சொன்னதே இல்லை.
சூட்டிங் ஸ்பாட்டிலேயே ஏகப்பட்ட உதவிகளைச் செய்தவர் தான் அண்ணன் விஜயகாந்த். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாமெல்லாம் இருந்தோம்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருந்தது என்கிறார் ஆனந்த்பாபு.
COPYRIGHT 2024
Powered By Blinkcms