செம ஹேண்ட்சம்மா மாறிட்டாரே அஜித்!.. ஆரவ் வெளியிட்ட புது போட்டோ செம வைரல்!..

Vidamuyarchi: அஜித் நடிப்பில் உருவாகும் புதிய புகைப்படங்களின் அபடேட் வெளியாவதில்லையே தவிர அவரின் புகைப்படங்கள் தினமும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. பொதுவாக அஜித் எந்த சினிமா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை. அவர் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே அவர் போக மாட்டார்.

ஆனால், பைக்க எடுத்துக்கொண்டு ஜாலியாக ஊர் சுற்றப்போய்விடுவார். சினிமா கூட அவருக்கு தொழில் மட்டும்தான். ஆனால், பைக் ஓட்டுவது, ரிமோட் ஹெலிகாப்டர் இயக்குவது, துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்வது என அவருக்கு நிறைய பேஷன்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: கருப்பா இருக்க.. எப்படி அஜித் படத்துல? பல தடவை தல படத்தை மிஸ் பண்ண சோகத்தில் நடிகர்

என்னுடை படத்தில் மட்டுமே ரசிகர்கள் என்னை பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்த பணம் தயாரிப்பாளருக்கு போய்ச்சேரும் என முடிவெடுத்தார். அதனால்தான் எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வதில்லை. ஆனால், தற்போது சமூகவலைத்தளங்களை பலரும் பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில் அவரின் புகைப்படங்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை.

ajith

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அசர்பைசான் நாட்டில் இருக்கிறார் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நடித்து வருகிறார். எனவே, படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அஜித்தோடு சேர்ந்து ஊரை சுற்றுவது, டின்னர் போவது இருவரும் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்கள்.

ajith

மேலும், அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மேலும் இரண்டு புகைப்படங்களை ஆரவ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அஜித் வழக்கம்போல் கோட் சூட்டுடன் ஸ்டைலாக இருக்கிறார். இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: அஜித்தோட டின்னர் சாப்பிடுறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும்!.. பிக் பாஸ் பிரபலம் வெளியிட்ட செம பிக்ஸ்!

Related Articles
Next Story
Share it