நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே நீலாங்கரையில் உள்ள பங்களாவில் தனித்து வசித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும், அவரின் மனைவி, மகள், மகன் ஆகியோர் லண்டனில் வசிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான், விஜயின் மனைவி சங்கீதா விஜயிடமிருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அதோடு ஒரு நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாகவும் வீட்டிலேயே அவரை கூட்டிட்டு வந்து கூட்டி வந்து அவர் குடும்பம் நடத்தியதாகவும் அந்த விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்டிருக்கிறார். குழந்தைகளின் எதிர்காலம் கருதி இவ்வளவு நாட்கள் பேசாமல் இருந்ததாகவும் இனிமேல் வேறு வழியில்லை என்பதால் இதுபற்றி பேசுகிறேன் எனவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
மேலும் விஜயின் வருமானத்திற்கு ஏற்றார்போல் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.. அதோடு தான் லண்டனை சேர்ந்தவர் என்பதால் சென்னையில் வசிக்க வீடு இல்லாத காரணத்தினால் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் வசிக்க தனக்கு அனுமதி தர வேண்டும் எனவும் கூறியிருந்தார்..
இதைத்தொடர்ந்து, இதைப்பற்றி பலரும் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள்..
விஜயின் தீவிர ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.. அதோடு இதற்கு பின்னணியில் அரசியல் இருக்கிறது எனவும் அவர்கள் பேசுகிறார்கள்.. மேலும், அவரே மனமுடைந்திருப்பார்.. அவருக்கு இந்த நேரத்தில் நாங்கள் ஆதரவாக இருப்போம் எனவும் சொல்கிறார்கள்..
மற்றவர்கள் விஜய்க்கு எதிராக கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.. இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் ஆரி ‘விஜய் சங்கீதா விஷயத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது.. விவாகரத்து அவருக்கு மட்டும் அல்ல.. யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.. அவர் அரசியலை விமர்சிக்கலாம்.. தனிமனித தாக்குதல் மிகவும் தவறானது.. அடுத்தவரின் பாத்ரூமையும் படுக்கையையும் எட்டிப் பார்க்கும் கலாச்சாரம் மிகவும் அசிங்கம் என கூறியிருக்கிறார்..

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com
