சித்தப்பாவான டேனியல் பாலாஜிக்கு உரிய மரியாதையை செலுத்திய அதர்வா.. வைரலாகும் புகைப்படம்

atharva
Actor Daniel Balaji: தமிழ் சினிமா இன்று ஒரு மிகப்பெரிய நடிகரை இழந்துள்ளது. சமீப காலமாக திரையுலகம் பல இழப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவு அனைத்து திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் , தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ள டேனியல் பாலாஜி தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடி பெயர்ந்தார். சித்தி தொடர்தான் அவரை யார் என இந்த உலகிற்கு காட்டியது. அதுவரை இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில்தான் இருந்தார். சித்தி தொடரில் டேனியல் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் அச்சாணி போல பதிந்தார்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானை ஷங்கர் கழட்டிவிட்டதுக்கு காரணம் இதுதானா?!.. என்னப்பா சொல்றீங்க?!..
அதன் மூலம் கிடைத்த வரவேற்பு தான் வெள்ளித்திரையில் தலை காட்ட முடிந்தது. பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க போன்ற பல படங்களில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜியை ரகுவரனுக்கு அடுத்த இடத்தில் வைத்து மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் அவரின் திடீர் மரணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

mura
48 வயதான டேனியல் பாலாஜி நடிகர் முரளியின் சொந்த சித்தி பையன். அதனால் டேனியல் பாலாஜியின் உடலுக்கு முரளியின் மகனும் நடிகருமான அதர்வா தன் தாய் மற்றும் குடும்பத்துடன் உரிய அஞ்சலியை செலுத்தினார். டேனியல் பாலாஜியின் குடும்பத்தாருக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார். என்ன இருந்தாலும் அதர்வாவுக்கு டேனியல் பாலாஜி சித்தப்பா என்பதால் அவர் உடல் முன் நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் அதர்வா.
இதையும் படிங்க: கடைசி வரை நடக்காமல் போன டேனியல் பாலாஜியின் நீண்டகால ஆசை… நடந்து இருந்தா நல்லா இருக்குமே!