பாக்கக் கூடாதுனு தடுத்தாங்க! தல செஞ்ச வேலைய பார்த்து மிரண்டுட்டேன் - இப்படியெல்லாம் இருப்பாரா அஜித்?

by Rohini |   ( Updated:2023-10-31 08:00:26  )
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். குறிப்பாக முன்னணி நடிகைகளின் மிகவும் ஃபேவரைட்டான நடிகர் என்றால் அது அஜித்தான். யாரை கேட்டாலும் என்னுடைய ஃபேவரைட் அஜித் என்றுதான் சொல்வார்கள். அந்தளவுக்கு நடிகைகளிடம் மிகவும் கண்ணியமாக நடக்கக் கூடிய நடிகர் அஜித்.

ரசிகர்களை பார்க்க வில்லை என்றாலும் அவரிடம் இருக்கும் சில நல்ல குணங்கள் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பதுதான் நமக்கு நல்லது என்ற கொள்கையை கொண்டவராகவும் இருக்கிறார்.

இதையும் படிங்க: ரசிகன் செஞ்ச செயலால் ஆடிப்போன அஜித்! சென்னையில் படப்பிடிப்பை நிறுத்தியதற்கும் இதுதான் காரணமாம்

இந்த நிலையில் ஸ்டண்ட் குரூப்பில் ஃபைட்டராக இருக்கும் நவின் என்பவர் அஜித்தை பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். இவர் தெறி படத்தில் அந்த பள்ளிக் கூடத்தில் அடாவடி செய்யும் கும்பலில் ஒருவராக நடித்தவர். முதன் முதலில் அஜித்தின் வேதாளம் படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்.

முதல் படமே அஜித் படம் என்ற பெரிய எதிர்பார்ப்பில்தான் போனாராம். ஆனால் அறிமுகம் என்பதால் யார் கூடயும் பேசக் கூடாது. அமைதியாக இருக்கனும் என்ற கண்டீசன்கள் எல்லாம் போட்டிருக்கிறார்கள். முதல் ஷார்ட் அஜித்திடம் மொட்டை ராஜேந்திரன் பேசுவதை போல் எடுத்திருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரனுக்கு க்ளோஸ் ஷார்ட் என்பதால் அஜித் போய் உட்கார்ந்து விட்டாராம். மொட்டை ராஜேந்திரனின் அடியாள்களில் ஒருவராக இந்த நவின் முதல் வரிசையில் நின்று கொண்டிருந்தாராம்.

இதையும் படிங்க: தேவர் மகன் கிளைமேக்ஸ் காட்சியை மீண்டும் எடுக்க சொன்ன கமல்!.. அந்த சின்ன வசனம்தான் ஹைலைட்!..

உடனே எதிரே இருந்த அஜித் கேமிராவை வைத்து நவினை மட்டும் ஃபோக்கஸ் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். இன்னொரு நாள் வீரவிநாயகா பாடல் காட்சியில் மேலே அஜித் நின்று கொண்டிருந்தாராம். கீழே நவின் இருந்தாராம். அவரை கூப்பிட்டு உங்கள் போட்டோ உங்க வீடு தேடி வரும் என்று சொன்னாராம்.

சொன்ன மாதிரியே பெரிய ஃபிரேம் போட்டு நவின் புகைப்படம் அவரை வந்து சேர்ந்ததாம். அதன் பிறகு ஒரு ஃபைட் சீனுக்கு பைக் தேவைப்பட நவின்தான் ஏற்பாடு செய்து கொடுத்தாராம். அந்த வண்டியை ஓட்டாமலேயே அதில் உட்கார்ந்ததும் பைக்கில் ப்ரேக் லூசா இருக்கிறது, அது சரியில்லை, மாத்தனும் என சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தாராம் அஜித்.

இதையும் படிங்க: தளபதியோட உத்தரவு! தீயாய் வேலை செய்யனும் குமாரு – ‘லியோ’ வெற்றிவிழா இப்படித்தான் நடக்கப் போகுது

Next Story