விளம்பரத்தில் நடிக்க சட்டையை கடன் வாங்கிய அஜித்!.. மனுஷன் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?!..
சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் மேலே வருவது என்பது மிகவும் கடினமானது. அப்படியே வாய்ப்பு கிடைத்து நடிக்க துவங்கினாலும் அந்த வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் வளர விட மாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி நின்றால்தான் நிலைத்து நிற்க முடியும்.
சினிமாவை பொறுத்தவரை விஜய்க்கு நேர் எதிரானது அஜித்தின் எண்ட்ரி. அப்பா எஸ்.ஏ.சி இயக்குனராக இருந்ததால் அவர் மூலமாக சினிமாவில் நடிக்க வந்தார் விஜய். ஆனால், மாடலிங் துறையில் நுழைந்து அப்படியே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு முயற்சிகள் செய்து வாய்ப்புகளை பெற்றவர் அஜித்.
இதையும் படிங்க:விதவை பெண்ணுடன்தான் உனக்கு திருமணம்! சிவக்குமாரின் ஜாதகத்தை கணித்த நடிகை.. யார் தெரியுமா?
அஜித்துக்கு இளம் வயது முதலே பைக் ஓட்டுவதில்தான் அதிக ஆர்வம். எப்போதும் வீட்டிற்கு அருகே இருக்கும் ஒரு பைக் மெக்கானிக் கடையில்தான் நேரம் செலவழிப்பார். ஒரு பைக் ரேசர் ஆக வேண்டும் என்பதுதான் அவரின் குறிக்கோளாக இருந்தது. பள்ளி படிப்பில் பெரிய ஆர்வம் இல்லை. எனவே, ஒரு கட்டத்தில் படிப்பை நிறுத்திவிட்டார்.
பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அஜித்தின் நண்பர்கள் ‘நீ விளம்பர படங்களில் நடிக்கலாமே’ என சொல்ல அவருக்கும் அந்த ஆசை வந்தது. ஆனால், ஆனால், நல்ல உடைகளை வாங்க அவரிடம் பணம் இல்லை. இதுபற்றி மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஊடகம் ஒன்றில் சொன்னபோது ‘அஜித்துக்கு 16 வயது இருக்கும்போது ஒரு விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அவரிடம் ஒரு நல்ல சட்டை கூட இல்லை. அப்போது என் வீட்டுக்கு வந்து என் மகன் சரணிடமிருந்து ஒரு சட்டையை வாங்கி கொண்டு போனார்’ என தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது விவாகரத்து சர்ச்சை… என்ன சொல்லி இருக்காங்க பாருங்க!
எஸ்.பி.பியின் மகன் சரணும், அஜித்தும் பள்ளி தோழர்கள். அஜித் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதும் தனக்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லி வாய்ப்பு கொடுத்தவர் எஸ்.பி.பிதான். அப்படித்தான் தெலுங்கில் உருவான பிரேம புஸ்தகம் என்கிற படத்தில் அஜித் நடித்தார். இதுதான் அஜித்தின் முதல் திரைப்படம்.;
அதன்பின்னரே, தமிழில் அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்த படத்தில் நடிக்க தேர்வானதும் அஜித் கேட்ட முதல் சம்பளம் 40 ஆயிரம். அதுவும் சொந்தமாக பைக் வாங்க வேண்டும் என ஆசையில் அந்த சம்பளத்தை கேட்டார் அஜித். ஆசைப்பட்ட படியே முதல் படத்தின் சம்பளத்தில் ஆசையாக ஒரு பைக்கை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல சட்டை வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த அஜித் இப்போது 100 கோடியை சம்பளமாக பெறுகிறார்.