பைக் பயணத்தை முடித்த அஜித்!.. நடந்ததெல்லாம் கேட்டா ஒரு படமாவே எடுக்கலாம்!..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து சாதித்து காட்டியவர். அமராவதி திரைப்படத்தில் அறிமுகமாகி துணிவு வரை 61 படங்களில் நடித்துவிட்டார்.
அடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான கதையை இயக்குனர் உருவாக்கி வருகிறார். இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக அஜித் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் சென்றுவிட்டார். நேபாளம், பூடான் உள்ளிட்ட மாநிலங்களில் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் அவர் பயணம் செய்தாராம்.
அதோடு, தினமும் இரவு ஹோட்டலுக்கு வந்தபின் எங்கு செல்வது, எப்படி செல்வது, மாவோயிஸ்ட்டுகள் இல்லாத இடமாக தேர்ந்தெடுத்து அவர்தான் ரூட் போட்டு தன்னுடைய குழுவுக்கு கொடுத்துள்ளார். தினமும் 800 கிலோ மீட்டர் பயணம் செய்து ஹோட்டலுக்கு செல்லும்போது வண்டி சேரும் சகதியுமாக இருக்குமாம். அதோடு, அவரும் அவரின் குழுவும் அணிந்திருக்கும் உடைகளெல்லாம் பயங்கர அழுக்காக இருக்குமாம்.
எனவே, ஹோட்டலில் மெயின் கேட் வழியாக அவர்களை விடாமல் பின் கேட் வழியாக வாருங்கள் என சொல்லுவார்களாம். தினமும் அப்படித்தான் தனது அறைக்கு அஜித் செல்வாராம். அதோடு, தினமும் காலை சீக்கிரமாக எழுந்து வாலியில் தண்ணீர் பிடித்து தனது பைக்கை அஜித்தே கழுவுவாராம். மேலும், தினமும் தன்னுடய அழுக்கு துணிகளை அஜித்தே துவைத்து விடுவாராம்.
இப்படி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் வெளியே தெரியவந்துள்ளது. பைக் பயணத்தை முடித்துள்ள அஜித் தான் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தின் முழுக்கதையை கேட்க தயாராக இருக்கிறார். அதற்கான வேலையில் மகிழ்திருமேனியும் ஈட்டுபட்டுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.