துணிவு படத்தின் மூலம் நெருக்கமான அஜித்-அமீர்!.. பம்பர் ஆஃபரை கொடுத்து அசத்திய நம்ம தல!..
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் டான்ஸ் மாஸ்டர் அமீர். அதுவும் பாவ்னி மீதுள்ள காதல் தான் அவரை மேலும் பிரபலமாக்கியது. பிக்பாஸ் வீட்டிற்குள் பாவ்னியுடனான கெமிஸ்ட்ரி பார்த்த அனைவரையும் ரசிக்கும் படியாக மாற்றியது.
கடைசி வரை பாவ்னி அமீரின் காதலை ஏற்காமலேயே நெருக்கமாக பழகிவந்தார். ஒரு கட்டத்தில் பாவ்னியும் அமீரை காதலிப்பதாக கூறி இருவரும் ஒன்றாக லிவ்விங் ரிலேசன்ஷிப்பில் இருந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இந்த ஜோடி அஜித்தின் துணிவு படத்திலும் இணைந்தது.
இதையும் படிங்க : அப்பாடா!.. ‘விடுதலை’ படப்பிடிப்பில் இருந்து விடுதலை ஆன சூரி!.. முடிஞ்ச கையோட செஞ்ச முதல் காரியம் என்ன தெரியுமா?..
இதனால் அஜித்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்ற அமீர் தன்னுடைய கதைகளை கூறினாராம். மேலும் எனக்கு எதாவது ஒரு நல்ல வாய்ப்பை பெற்று தருமாறும் அஜித்திடம் கூறினாராம். ஏற்கெனவே அஜித் இளகிய மனம் கொண்டவராதலால் அமீரின் கதையை கேட்டு ஏதாவது செய்யவேண்டும் என எண்ணினாராம்.
அந்த வகையில் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைந்து உருவாகும் படத்தில் அமீருக்கு வெயிட்டான ரோலை கொடுத்திருக்கிறாராம். அந்த புதிய படத்தில் அமைய இருக்கும் அனைத்துப் பாடல்களுக்கும் அமீரே டான்ஸ் மாஸ்டராக பணியாற்ற இருக்கிறாராம்.
இதன் மூலம் எப்படி சாண்டி பிக்பாஸ் மூலம் இன்று பாலிவுட் வரைக்கும் ஒரு முன்னனி டான்ஸ் மாஸ்டராக இருக்கிறாரோ அதே போல அமீரும் தன் பயணத்தை அஜித் மூலம் ஆரம்பிக்க இருக்கிறார். இந்த தகவலை பிரபல யுடியூப் வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.