அஜித்கிட்ட இருக்கிற ஒரே நல்ல பழக்கம்! இயக்குனர்களுக்கு இது போதுமே.. கால்ஷீட்தானே முக்கியம்
Actor Ajith: கோலிவுட்டில் ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் நடிகர் அஜி.த் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. ஒட்டுமொத்த தமிழக ரசிகர்கள் மனதிலும் ஒரு நிலையான நடிகராக இருந்து வருகிறார். தற்போது அஜித் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக ஒரு தகவல் வந்து கொண்டிருக்கின்றது.
இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு புறம் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இப்படி அஜித்தின் நடிப்பில் அடுத்தடுத்து இரு பெரும் பெரிய படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. சமீப காலமாக அஜித் ஒரு ஆக்சன் ஹீரோவாகவே மக்கள் மத்தியில் பிரதிபலித்து வருகிறார்.
இதையும் படிங்க: துணிவு படத்தின் ஹிட்டுக்கு முக்கிய காரணம்… ஆனால் விடாமுயற்சியில் நடக்காமல் போகிடுச்சே…
ஆனால் ஆரம்ப காலங்களில் ஆக்சன் காட்சிகளில் நடிக்க கொஞ்சம் தயங்குவாராம் அஜித். இதைப் பற்றி இயக்குனர் முரளி அப்பாஸ் ஒரு தகவலை பகிர்ந்தார். ராசி என்ற படத்தை இயக்கியவர் தான் முரளி அப்பாஸ். அதில் சில ஆக்சன் காட்சிகளும் இருக்கும். அதற்கு அஜித் இப்படி ஆக்ஷன் காட்சிகளை வைத்திருக்கிறீர்களே? எப்படி என்னை வைத்து எடுக்க முடியும் என நினைத்தீர்கள் என கேட்டாராம்.
அதற்கு முரளி அப்பாஸ் ஆசை படத்தில் உங்களை கைது செய்யும் ஒரு காட்சியில் மிகவும் கோபத்துடன் சிலுர்த்திக் கொண்டு போவீர்கள். அப்பொழுதுதான் உங்களுடைய ஹீரோயிசமை நான் பார்த்தேன். அதன் காரணமாகத்தான் இந்த படத்தில் நான் ஆக்சன் காட்சிகளை வைத்திருக்கிறேன் எனக் கூறினாராம். அது மட்டும் அல்லாமல் அஜித்திடம் இருக்கும் ஒரு நல்ல பழக்கம் கதையையே கேட்க மாட்டாராம்.
இதையும் படிங்க: நேராக ரிக்கார்டிங் தியேட்டருக்கே வந்து மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்! இது எப்போ நடந்தது?
ஒன்லைன் மட்டும் கேட்டுவிட்டு ஓகே பண்ணி விடுவாராம். பணம் போடுவது தயாரிப்பாளர்கள். நீங்கள் படம் எடுப்பவர்கள். உங்களைவிட பொறுப்பாக வேறு யார் இருக்க முடியும் என்ற காரணத்தினால் அஜித் எல்லாவற்றையும் இயக்குனர் தயாரிப்பாளர் இடமே ஒப்படைத்து விடுவாராம்.