எம்.ஜி.ஆருக்கு அடுத்து அது அஜித்துக்குதான் கிடைச்சது!.. தளபதிக்கு கூட இல்லையாம்!..

Actor ajith: பைக் மெக்கானிக்காக ஆசைப்பட்ட அஜித்துக்கு ஒரு கட்டத்தில் மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் ஏற்பட்டது. ஒரு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்தார். அதன்பின் அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அட அழகாக இருக்கிராரே என பெண் ரசிகைகளும் இவருக்கு உருவானார்கள்.
அதன்பின் பல திரைப்படங்களிலும் கதாநாயகியை காதலிக்கும் வேடத்தில் நடித்தார். அப்படியே ஆக்ஷன் ரூட்டுக்கும் மாறி பில்லா மற்றும் மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதோடு மாஸ் ஹீரோவாகவும் மாறினார். பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: தன் ரசிகர்களுக்காக பலரிடமும் மன்னிப்பு கேட்ட தல அஜித்!. தளபதி இவர்கிட்ட கத்துக்கணும்..
அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் போட்டி நடிகராக விஜய் கருதப்படுகிறது. விஜயின் படங்கள் வெளிநாட்டில் நல்ல வரவேற்பு பெறும். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை விஜயின் படங்களை விட அஜித்தின் படங்கள் அதிக வசூலை பெறும் என சினிமா வட்டாரத்தில் சொல்வதுண்டு.
சினிமாவை தாண்டி அஜித்துக்கு மக்களிடம் ஒரு ஆதரவு இருக்கிறது. எம்.ஜி.ஆரை போல வசீகரம் கொண்ட முகம் முக்கிய காரணம். அவரை அரசியலுக்கு வரும்படி ஜெயலலிதா கூட அழைத்தார். ஆனால், அதை அஜித் ஏற்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு பின் சில விஷயங்கள் அஜித்துக்கு மட்டுமே அமைந்ததாக பலரும் சொல்வதுண்டு.
இதையும் படிங்க: ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்
அஜித் நடித்து 2001ம் வரும் வெளியான திரைப்படம் சிட்டிசன். முதன் முறையாக அஜித் பல வேடங்களிலும் நடித்திருந்ததால் ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இருந்தது. இந்த படம் சென்னை அண்ணாசலையில் உள்ள தேவி திரையரங்கில் வெளியானபோது டிக்கெட் முன் பதிவு செய்ய பெரிய நீண்ட வரிசை நின்றுள்ளதாம்.
அதற்கு முன் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்குதான் இப்படி நீண்ட வரிசை இருந்ததாக தியேட்டர் அதிபரே ஒருமுறை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றிமாறனுடன் இணையும் அஜித்?.. இவ்ளோ ஷாக் கொடுத்த தாங்கமாட்டாங்க ஃபேன்ஸ்!…