ரசிகர்கள் இத செஞ்சா நான் ஜெயிச்ச மாதிரி! அஜித் சொன்ன சீக்ரெட்டை பகிர்ந்த இயக்குனர்

Actor Ajith: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு தலை சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைய இருக்கிறார்.

அதை தொடர்ந்து வெற்றிமாறனுடன் கூட்டணி வைப்பதாகவும் ஒரு டாக் போய்க் கொண்டிருக்கிறது. வெற்றிமாறனுடன் மட்டும் அஜித் இணைந்து விட்டால் அது அவரின் நடிப்பின் தரத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மெட்டி ஒலி தனமா இவங்க.. என்னங்க இப்படி ஆகிட்டீங்க..! 10 வருஷம் கழிச்சு வெளிவந்த உண்மை..!

சினிமா கெரியரில் ரசிகர்களை சந்திக்காமல் அவர்களுடன் உரையாடமல் இருக்கும் நடிகருக்கு இந்தளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றால் அது அஜித்திற்கு மட்டும்தான். இது ஒரு மேஜிக்காகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் தன் மேல் இந்தளவு பாசம் வைத்திருப்பதை பற்றி இயக்குனர் எச்.வினோத்திடம் அஜித் பகிர்ந்திருக்கிறார். அதை ஒரு பேட்டியில் எச்.வினோத்தே சொல்லியிருக்கிறார். அதாவது ‘ ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு வகையில என்னை பிடிச்சிருக்கு. அவங்களாலதான் இன்னிக்கு அஜித் ஒரு பேசப்படுகிற நடிகராக இருக்கிறதுக்கு அவங்களோடு அன்புதான் காரணம். அஜித்னாலே கிங் ஆஃப் ஓப்பனிங் என்ற மாஸை ரசிகர்கள்தான் கொண்டு வருகிறார்கள். ’

இதையும் படிங்க: வில்லனை வீட்டுக்குள்ள களமிறக்குறீங்க போல… ஸ்ருதி காமெடி பீஸ் ஆகாம இருந்தா சரி… விஜயா ஆட்டம் ஆரம்பமாகுமா?

‘ஆனால் அவங்க என் மேல காட்டுற அன்பை எப்படி திருப்பி அவங்க மேல காட்டுறது? அப்படினா அவங்க லைஃபை அவங்க நல்லா வாழ்ந்தால்தான் நானும் ஜெயிச்ச மாதிரி. அவங்களும் ஜெயிச்ச மாதிரினு அர்த்தம். அப்போது அவங்க வாழ்க்கையை நல்ல படியா வாழ வேண்டும் என்றால் அவங்க நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கனும். இத தான் ரசிகர்களுக்கு நான் சொல்ல முயற்சி பண்றேன்’ என்று கூறினாராம்.

 

Related Articles

Next Story