வெற்றிமாறனுடன் இணையும் அஜித்?.. இவ்ளோ ஷாக் கொடுத்த தாங்கமாட்டாங்க ஃபேன்ஸ்!…

Published on: November 30, 2023
vetrimaran
---Advertisement---

Vetrimaran: தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படுபவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக மாறி ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை என அடித்து ஆடியவர். இதுவரை எடுத்தது 7 படங்கள்தான் என்றாலும் ஒவ்வொன்றும் தரமான படங்கள். சிறந்த இயக்கத்திற்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

எனவே, மணிரத்னம் போன்ற இயக்குனர்களே அவருக்கு ரசிகராக மாறினார்கள். இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் நடிக்க விஜய் போன்ற நடிகர்களே ஆசைப்படுகின்றனர். விஜய்க்கு கூட அவர் கதை சொல்லி ஓகே செய்துள்ளார். ஆனால், நேரம் இன்னும் கூடிவரவில்லை.

இதையும் படிங்க: ரேஸில் ஜெயிப்பாரா நயன்? நாளை இத்தனை படங்களுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் – களைகட்டும் திரையரங்கம்

ஆனால், அஜித்துடன் விரைவில் வெற்றிமாறன் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இவர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிப்பதாக இருந்தது. மேலும், விடுதலை பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. இப்போது அவர் விடுதலை 2 படத்தை தயாரித்து வருகிறார்.

விடுதலை 2 படம் முடிய இன்னும் சில மாதங்கங்கள் ஆகும் என்பதால் அஜித் படம் அவரின் கையில் இருந்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் கைக்குக் சென்றுவிட்டது. இந்த படத்தை பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த செய்தியில் உண்மையில்லை. தயாரிப்பாளர் மாறினாலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் என அஜித் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதையும் படிங்க: இப்ப மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாமதான்… சூர்யா சொன்னது இப்ப அவருக்கே ஆப்பா போச்சே!…

இந்நிலையில், விடுதலை 2 தயாரிப்பளர் எல்ட்ரெட் குமாரிடம் ‘கண்டிப்பாக உங்களின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து கொடுக்கிறேன்’ என அஜித் சொல்லி இருக்கிறார். தற்போது வெற்றிமாறன் அவரின் கையில் இருப்பதால் அஜித் – வெற்றிமாறன் காம்பினேஷனை சேர்க்க எல்ட்ரெட் குமார் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டதாகவும், அதற்கான வேலையும் துவங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே, தெலுங்கு இயக்குனர் படத்தில் நடித்தபின் வெற்றிமாறன் படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் – அஜித் கூட்டணி என்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கும் கூட்டணி. ஏற்கனவே சூர்யா, விஜய் போன்றோர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க நினைத்தாலும் அஜித்துக்கு சுலபமாக அது அமைந்துவிட்டது.

ஆனால், இந்த பிராஜெக்ட் டேக் ஆப் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மூச்சுவிட சிரமப்படும் விஜயகாந்த்!.. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?!.. நடப்பது இதுதான்!..