அஜித் 50 தடவ மொட்டை போட்டும் ஃபிளாப் ஆன படம்!.. தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா!..

ajith
Actor ajith: சில நடிகர்கள் மட்டுமே தாங்கள் நடிக்கப்போகும் கதாபாத்திரத்திற்காக தங்களின் உடல் அமைப்பை மாற்றுவார்கள். இதை சினிமாவில் அதிகம் செய்தவர் நடிகர் விக்ரம். தில் படத்திற்காக போலீஸ் வேலைக்கு முயற்சி செய்யும் ஃபிட் ஆன இளைஞராக வருவார். கந்தசாமி படத்தில் ஒரு சிபிஐ அதிகாரிக்கான உடலமைப்பில் வருவார்.
அந்நியன், ஐ என அவர் காட்டிய சிரத்தைகள் எந்த நடிகரும் செய்யாதது. அதுவும் ஐ படத்தில் மொத்த எடையையும் குறைத்து எலும்பும் தோலுமாக இருப்பார். அதேபோல், நடிகர் கமல் ஆளவந்தான் படத்திற்காக கட்டுமஸ்தான உடலை கொண்டு வந்தார். அதேபோல், மேக்கப் என்று வந்துவிட்டால் கமலை போல ஒரு நடிகரை பார்க்க முடியாது.
இதையும் படிங்க: அவர பார்த்து மிரண்டுட்டேன்.. அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்!. அஜித்தே பாராட்டிய நடிகர்…
நாயகன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், இந்தியன், அன்பே சிவம் என பல திரைப்படங்களில் விதவிதமான கெட்டப்புகளில் வந்து கலக்கியவர் அவர். அதேநேரம், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்கள் சினிமாவுக்காக தங்களின் தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டார்கள். அப்படியே வந்து நடிப்பார்கள். விடாமுயற்சி படத்தில் கூட அஜித் அப்படித்தான் நடித்து வருகிறார்.
ஆனால், இதே அஜித் ஒரு படத்திற்காக 50 தடவைக்கும் மேல் மொட்டை போட்டார் என்றால் நம்ப முடிகிறது. ஆம், உண்மையில் இது நடந்தது. இப்போது காமெடி வேடங்களில் கலக்கி வரும் சிங்கம் புலி ‘ராம் சத்யா’ என்கிற பெயரில் இயக்கிய படம்தான் ‘ரெட்’. 2002ம் வருடம் வெளியான இந்த படத்தில் நாயகன் கமல் போல ஒரு நல்ல தாதா-வாக அஜித் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: அஜித் நடிக்க வேண்டிய மாஸ் கதை!.. சியான் விக்ரம் நடித்து சூப்பர் ஹிட்.. அட அந்த படமா?…
இந்த படத்தில் நடிப்பது என முடிவானதும் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க நினைத்த அஜித் சலூனுக்கு சென்று தனது முடியை குறைத்து விதவிதமாக வெட்டியிருக்கிறார். பார்த்தால் சிட்டிசன் படத்தில் நடித்த அதே கெட்டப் வந்துவிட்டது. எனவே, மொட்டை அடித்துக்கொண்டார். 10 நாள் கழித்து கொஞ்சம் முடி வளர்ந்த நிலையில் இதுதான் இந்த படத்தின் கெட்டப் என முடிவெடுத்தார். இந்த படம் ஆரம்பித்து முடியும் வரைக்கும் அஜித் சுமார் 50 தடவைக்கும் மேல் மொட்டை அடித்தாராம்.
இந்த தோற்றம் பற்றி பேசிய அஜித் ‘கதாநாயகன் ‘ரெட்’ ஒரு தாதா. அவன் தன்னுடைய அழகுக்கு முக்கியத்துவமெல்லாம் தரமாட்டான். தலையை சீவ அவனுக்கு நேரம் இருக்காது. அதனால் இந்த தோற்றத்தில் நடித்தேன்’ என விளக்கமும் கொடுத்தார். ஆனால், ரெட் திரைப்படம் ரசிகர்களை கவராமல் ஒரு தோல்விப்படமாகவே அமைந்தது. அதேநேரம், அஜித்துக்கு அவர் நடித்ததில் பிடித்த படமாக ரெட் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாபுவின் மகளாக இருந்த ஷாலினி… அஜித்தின் மனைவியான கதை.. எப்படி நடந்தது இந்த மேஜிக்..?