Cinema News
கொஞ்சமாவது மெனக்கெடும் விஜய்!.. அலட்டிக்காம கோடிகளை அள்ளிப்போடும் அஜித்!. அவருக்கு மச்சம்தான்!…
Vijay vs Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் – விஜய். இருவருமே ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள்தான். விஜய் தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலமாக சினிமாவில் நுழைந்தவர். அஜித்தோ தனது முயற்சியாலும், நண்பர்களின் உதவியாலும் சினிமாவில் நுழைந்தவர்.
இருவருமே ஆரம்ப கட்டத்தில் பல காதல் கதைகளில் நடித்து பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக மாறியவர்கள். அப்போது முதலே இருவருக்கும் நேரிடை மற்றும் மறைமுகமான போட்டி இருந்து வருகிறது. விஜயை திட்டி அஜித் தனது படத்தில் பாடல் வரிகளை வைப்பார். அஜித்தை மறைமுகமாக திட்டி விஜய் தனது படத்தில் வசனம் பேசுவார்.
இதையும் படிங்க: அஜித்தோடு ஒப்பிட்டு வெங்கட்பிரபு சொன்ன ஒரு வார்த்தை.. மொத்தமா சரண்டரான சிம்பு!…
ஆனால், நேரில் பார்த்துக்கொண்டால் இருவரும் நண்பர்கள் போல சிரித்து பேசிக்கொள்வார்கள். ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் நண்பர்களாக நடித்தார்கள். அதேபோல், நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்து பின் அப்படத்திலிருந்து வெளியேறினார்.
விஜய் நன்றாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அஜித் ஸ்டைலீஸான லுக்கில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அஜித் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் மூலம் மாஸ் ஹீரோவாக மாறினார். விஜய் ரசிகர் மன்றத்தை அதிகப்படுத்தியும், பலப்படுத்தியும் இருந்த நேரத்தில் தனது ரசிகர் மன்றங்களையே கலைத்தவர் அஜித்.
இதையும் படிங்க: அஜித் 63ன் பட்ஜெட் இதுதான்!. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?!.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ!…
ஆனாலும், அஜித்துக்கான ரசிகர்கள் என்னவோ குறையவில்லை. ரஜினி ரசிகர்களில் பலர் விஜய் ரசிகர்களாகவும், கமல் ரசிகர்களில் சிலர் அஜித் ரசிகர்களாகவும் மாறியதும் நடந்தது. விஜய் தனது உடலை பேணி காப்பதில் கவனமாக இருப்பார். ஜங்க் ஃபுட் என சொல்லப்படும் துரித உணவுகளை சாப்பிட்ட மாட்டார். மிகவும் அதிகமாகவும் சாப்பிட மாட்டார். குறிப்பாக இரவு 7 மணிக்கு மேல் எதுவுமே சாப்பிடமாட்டார். அவரின் இரவு உணவு 7 மணிக்கு முன்பே முடிந்துவிடும். அதோடு, தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் விஜய்க்கு உண்டு. அதனால்தான். 49 வயதிலும் இளமையாகவே இருக்கிறார்.
ஆனால், அஜித் இதற்கு நேர் எதிர். அவருக்கு உணவு கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. நடிப்பதில் கூட அதிக கவனம் செலுத்த மாட்டர். அடிக்கடி பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவார். உடல் எடையையும் சரியாக பரமாரிக்க மாட்டார். அதனால்தான் 52 வயதில் 62 வயது நபர் போல இருக்கிறார். ஆனாலும், சம்பளத்தில் விஜயை நெருங்கிவிட்டார் அஜித். விடாமுயற்சி படத்திற்கு ரூ.105 கோடி சம்பளம் வாங்கும் அஜித் அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு ரூ.165 கோடி சம்பளம் பேசியிருக்கிறார். கிட்டத்தட்ட விஜயின் சம்பளத்தை நெருங்கிவிட்டார்.
மொத்தத்தில் விஜய் கொஞ்சமாவது சினிமாவுக்கு மெனக்கெட்டாலும் அஜித்தோ எதுவுமே செய்யாமல் கோடிகளை அள்ளி குவித்து வருகிறார். அவருக்கு மச்சம்தான்.
இதையும் படிங்க: அஜித் – விஜய் நடிக்க மறுத்த அந்த கதை!.. தில்லா இறங்கி சம்பவம் செஞ்ச நவரச நாயகன்…