அளவில்லாமல் போன ரசிகர்களின் குடைச்சல்!.. காண்டாகி அஜித் செய்த காரியம்.. வாயடைத்து நின்ற ஒட்டுமொத்த யுனிட்!..

ajith
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் ஆரம்பம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா, நடிகை டாப்சி, நடிகர் ராணா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

ajith
2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஏ.எம். ரத்னம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக வெளிவந்த ஆரம்பம் திரைப்படம் அஜித்தின் கெரியரிலேயே நல்ல ஓப்பனிங்காக அமைந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் பெங்களூரில் நடைபெற்றிருக்கிறது.
படப்பிடிப்பு சமயத்தில் ரசிகர்களால் ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் அஜித், இதை நேரில் பார்த்த இந்த படத்திற்கு வசனம் எழுதிய சுபா சகோதரர்கள் தெரிவித்தனர். ஒரு சமயம் அஜித் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பெரும்பாலான கூட்டங்களுடன் அஜித்தை பார்க்க ரசிகர்கள் வந்துவிட்டனராம்.

ajith
அதன் பின் ஏதோ ஒரு வீட்டின் மீது ஏறி ஒரு ரசிகர் தவறி கீழே நின்று கொண்டிருந்த ஒரு காரின் மேல் விழுந்துவிட்டாராம். அதில் அந்த காரின் வின்ஷீல்டு உடைந்து விட காரின் உரிமையாளர் படப்பிடிப்பு நடத்திய யுனிட்டை திட்டியிருக்கிறார். இதனால் வருத்தமடைந்த அஜித் அந்த கார் உரிமையாளருக்கு வின்ஷீல்டு உடைந்ததற்கான பணத்தை கொடுத்தாராம்.
இதையும் படிங்க : நயன்தாரா உதவி இயக்குனராக பணியாற்றிய படம் எதுனு தெரியுமா?.. நம்ம தல படம் தான்!..
அதன் பின் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் எப்படியும் சிக்னலை கடந்து தான அஜித் போய் ஆக வேண்டும் என நினைத்து சிக்னலில் காத்திருந்தனராம். அஜித் கார் வருவதை பார்த்து காருக்கு பின்னாடியே கைசையத்து ரசிகர்கள் போக ஒரு ரசிகர் காரில் பக்கத்தில் விழுந்து விட்டாராம். இதன் மூலமும் மிகவும் வேதனையடைந்திருக்கிறார்.

ajith
அதன் பின் ஒரு ரசிகர் காரை துரத்திக் கொண்டு போய் அஜித் காரின் முன் நின்று காரை நிறுத்தி காருக்கு பாலாபிஷேகம் செய்கிறேன் என்ற பேரில் கண்ணாடியில் பாலை ஊற்றினாராம். இதை வைபர் போட்டு துடைத்தால் கார் கண்ணாடி பாலாகிவிட்டதாம். இதனால் கோபத்தில் உச்ச நிலைக்கு சென்ற அஜித் நேராக தயாரிப்பாளரிடம் தயவு செய்து படப்பிடிப்பு இடத்தை மாற்றுங்கள்.
இனிமேல் நான் படப்பிடிப்பிற்கு வரமாட்டேன் என்று அஜித் சொல்லிவிட்டாராம். இதனால் ஷாக் ஆன ரத்னம் விசாரிக்க நடந்ததை கேள்விப்பட்டு அஜித்திடம் பேசினாராம். அதன் பிறகு அஜித்தின் விருப்பப்படி வேறொரு இடத்தை மாற்றி படப்பிடிபை நடத்தியிருக்கின்றனர் படக்குழு.