குடியை நிறுத்திய அஜித்! அதற்கு காரணமே இவர்தானாம்.. என்ன ஒரு நட்புபா?
Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். பல வெற்றி தோல்விகளை சமமாக பார்த்த அஜித் ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் ஒரு டாப் ஹீரோவாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார்.
தற்போது அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வரும் நிலையில் நேற்று திடீரென சென்னை புறப்பட்டு வெற்றித்துரைச்சாமிக்கு அஞ்சலிசெலுத்த வந்திருந்தார். அதுதான் இப்போதுவரைக்கும் மீடியாக்களில் பேசு பொருளாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகளவில் 5 நாளில் லால் சலாம் வசூல் எவ்வளவு தெரியுமா?.. ரஜினி மகளால் நொந்து நூடுல்ஸ் ஆன லைகா!
ஒரு பக்கம் விஜயகாந்த் சமாதிக்கு இன்று வரை அஞ்சலி செலுத்தாதது குறித்தும் விமர்சனம் எழுந்து வருகிறது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தனன் கூறியது: வெற்றியும் அஜித்தும் நீண்ட கால நண்பர்கள். ஒரு வேளை அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் இல்லையென்றால் அவரும் வெற்றியுடன் இந்த பயணத்தில் இருந்திருப்பார். அந்தளவுக்கு இருவரும் சேர்ந்து வெளி நாடு பயணங்களை அதிகளவு மேற்கொண்டிருந்தார்களாம்.
அந்த நட்புக்காகத்தான் அஜித் அதிகாலையிலேயே வெற்றியின் வீட்டிற்கு வந்ததாகவும் ஷாலினியை நாள் முழுக்க வெற்றியின் வீட்டில் இருக்க சொன்னதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித்துக்கு பெரிய இழப்பாக வெற்றியின் இழப்பும் இன்னொன்று கலை இயக்குனர் மிலனின் இறப்பும்தான் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்றும் அந்தனன் கூறினார்.
இதையும் படிங்க: அஜித் போன இடத்துக்கு நாம போறதா?.. வெற்றி துரைசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தாமல் யுடர்ன் அடித்த விஜய்
படப்பிடிப்பு முடிந்து மாலை நேரங்களில் அஜித்தின் பார்ட்டியில் கண்டிப்பாக மிலன் இருப்பாராம். இருவரும் சேர்ந்து மது அருந்துவது என மகிழ்ச்சியாக இருப்பார்களாம். அந்த மதுவே மிலனை பலி வாங்கியதால் மிலன் இறப்பிற்கு பின் அஜித் குடிப்பதையே நிறுத்தி விட்டாதாக அந்தனன் கூறினார்.