சினிமாவில் சர், எக்ஸ்க்யூஸ் மீ என்ற வார்த்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதற்கு காரணமாக இருந்தவர்கள் சிலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் அமீர். அமீர், பாலா, சீமான் போன்றவர்கள் வந்த பிறகு தான் ‘அண்ணே’ என்று மனதை உருக வைக்கும் முறையை கொண்டு வந்தார்கள்.
இன்று சினிமாவில் எங்கு சுற்றி பார்த்தாலும் அண்ணே என்ற வார்த்தை அடிக்கடி அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதை கேட்கும் போதே எப்பேற்பட்ட உள்ளுணர்வை ஏற்படுத்துகிறது. சினிமா ஒருவரை கெடுக்கும் என்பதே
அனைவரின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அதே சினிமா ஒருவரை வாழவைக்கும் என்பதற்கு உதாரணமே அமீர்தான்.
சினிமாவிற்கு வருவதற்கு முன் மது, புகை இவற்றிற்கு கடும் அடிமையாக இருந்தாராம் அமீர். ஆனால் அது சினிமாவில் சகஜம் என்பதை புரிந்து கொண்டு சினிமாவில் சாதிக்க வேண்டும் என அந்த பழக்கத்தை அறவே விட்டவர் அமீர். தன் முதல் படத்திலேயே தான் யார் என்பதை இந்த சினிமாவிற்கு காட்டியவர் அமீர்.
மௌனம் பேசியதே படம் தான் அமீர் இயக்கிய முதல் படம். அந்த படத்தில் காதலின் ஆழத்தை அவ்ளோ அழகாக காட்டியிருப்பார். அடுத்தப் படமாக ஜீவாவின் ராம் படம் அமைந்தது. அவரின் கெரியரிலேயே திருப்புமுனையாக அமைந்த படம் ‘பருத்தி வீரன்’. அமெரிக்காவில் இருந்து படித்து வந்த ஒரு இளைஞனை தர லோக்கலாகவும் காட்ட முடியும் என்பதற்கு உதாரணம் தான் பருத்தி வீரன் திரைப்படம்.
கார்த்திக்கு பருத்தி வீரன் திரைப்படம் ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமீர் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட நிரூபர்கள் விஜய் நடிக்கும் லியோ படத்தை பற்றி கேட்டார்கள்.
இதையும் படிங்க : இரட்டை வேடத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர்… பாகவதருக்கே டஃப் கொடுத்த ஹீரோவின் சுவாரஸ்ய வரலாறு..
லியோ படத்தில் பாலிவுட்டில் இருந்து வில்லன் நடிகரை இறக்குமதி பண்ணியிருக்கிறார்களே? ஏன் தமிழ் நாட்டில் வில்லன் நடிகர்களே இல்லையா? என கேட்டனர். அதை கேட்டதும் டென்ஷனான அமீர் இப்போது வரும் படங்கள் எல்லாம் பான் இந்தியா படங்களாகவே மாறி வருகின்றது. அதனால் தான் மற்ற மொழி சினிமாக்களில் இருந்து நடிகர்களை அழைக்கின்றனர். இதெல்லாம் ஒரு கேள்வியா? கதைக்கு எந்த மாதிரியான நடிகர்கள் தேவை என்பதை கதை தான் முடுவு பண்ணும் , அதை வைத்தே நடிகர்களை தேர்வு செய்கின்றனர் என ஆக்ரோஷமாக கூறிவிட்டு சென்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…