‘தளபதி 68’ல் சிக்கிய அந்த பாலிவுட் நடிகர்! ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடியா இருப்பார் போலயே!...

Thalapathy68: லியோ படத்தை பற்றிய பேச்சுக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் வெங்கட் பிரபு கொடுக்கும் புது புது அப்டேட் தான். ஏற்கனவே லியோ படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் விஜயை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்ற வெங்கட் பிரபு அங்குள்ள பணிகளை எல்லாம் முடித்து விட்டு சென்னை திரும்பினார்.

ஆனால் விஜய் மட்டும் அமெரிக்காவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தளபதி 68 படத்தை ஒரு தரமான படமாக மாற்றும் முயற்சியில் வெங்கட் பிரபு மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறார். ஒரு பேன் இந்திய படமாக உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க என்னென்ன முயற்சிகளை எடுக்க வேண்டுமோ அத்தனையையும் எடுத்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…

சுயம்வரம் என்ற படத்தில் தான் 90களின் ஒட்டுமொத்த நாயகர்களையும் ஒரு சேர பார்க்க முடிந்தது. அதன் பிறகு போட்டிகள், சினிமாவின் புதுபுது பரிணாமங்கள் என மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவே பிற நடிகர்கள் யோசித்தனர். ஆனால் பேன் இந்தியா படம் என்ற வார்த்தை எப்பொழுது பிரபலமானதோ அதிலிருந்தே உள்ளூர் நடிகர்கள் மட்டும் இல்லாமல் பிற மொழி நடிகர்களும் கோலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிலையில் இதுவரை செய்யாத முயற்சியாக தளபதி 68 படத்தில் பிரசாந்தை கொண்டு வர வெங்கட் பிரபு தீவிரம் காட்டி வருகிறார். பிரசாந்தின் தந்தையும் ‘படக்குழு பிரசாந்தை அணுகியது உண்மைதான் என்றும் இன்னும் ஓரிரு நாள்களில் அதற்கான முழு விபரம் தெரியவரும்’ என்றும் கூறியிருக்கிறார். மேலும் படத்தில் பிரபுதேவா இருப்பதும் உறுதியாகிவிட்டது.

இதையும் படிங்க : கண் இமைக்குற நேரத்துல முடிஞ்சிடுச்சி!.. மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த நடிகர்…

இந்த நிலையில் தளபதி 68 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானும் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேமியோ ரோலுக்காக அமீர்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இன்னும் அவர் தரப்பில் இருந்து பதில் எதும் சொல்லவில்லையாம். ஏற்கனவே அமீர்கான் தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது என கூறியிருந்தார்.

ஒரு வேளை அவரின் ஆசையை வெங்கட் பிரபு நிறைவேற்றினால் கூட சந்தோஷம். ஒரு வழியாக தளபதி 68 படத்தை லியோ படத்தை விட பெரிதாக பேச வைக்க வெங்கட் பிரபுவின் முயற்சி கொஞ்சம் அதிகம்தான்.

இதையும் படிங்க: தளபதி மட்டும்தான் மோட்டிவேட் பண்ணுவாரா? ‘தல’ யும் பண்ணுவாரு – மார்க் ஆண்டனிக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it