கண் இமைக்குற நேரத்துல முடிஞ்சிடுச்சி!.. மாரிமுத்துவின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த நடிகர்…

0
715
marimuthu

சின்னத்திரை, பெரிய திரை என கலக்கி வந்தவர் நடிகர் மாரிமுத்து. கண்ணான கண்ணே, புலிவால் ஆகிய இரண்டு படங்களை இயக்கியும் இருக்கிறார். மணிரத்னம், வசந்த், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் ஆகியோரிடம் பல வருடங்கள் உதவி இயக்குனராக இருந்துள்ளார். கவிஞர் வைரமுத்துவிடமும் சில வருடங்கள் உதவியாளராக இருந்துள்ளார்.

மதுரையிலிருந்து இயக்குனராகும் ஆசையில் சென்னை வந்து தனது கனவை நிறைவேற்றியவர். இயக்குனராக அவர் பிரபலமாகவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து அவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதேபோல், திடீரென சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு மீம் மெட்டீரியலாகவும் மாறினார்.

இதையும் படிங்க: எனக்கு என்னமோ ஆகப்போகுது!.. கெட்டது நடக்கபோகுது!.. அப்போதே கணித்த மாரிமுத்து!.. வீடியோ பாருங்க….

இதனால் இப்போதுள்ள இளைஞர்களுக்கும் அவரை பிடித்துப்போனது. அவர் பேசும் ‘இந்தாம்மா ஏய்’ என்கிற வசனத்தை வைத்து பல மீம்ஸ்களும் உருவானது. ஒருபக்கம், அதிக திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். அதோடு, சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர் நீச்சல் சீரியல் மூலம் சீரியல் ரசிகர்களிடமும் பிரபலமானார்.

இப்படி பிஸியானதால் அவரின் உடல் நிலையை அவர் சரியாக பார்த்து கொள்ளாமல் போய்விட்டாரா என தெரியவில்லை. இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேச சென்றபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே உடனே மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: இடுப்புக்கு மேல பிரச்னை… ஜோதிடர் சொன்னது பழித்ததா… மாரிமுத்து மறைவால் அதிர்ச்சியில் திரையுலகம்!

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துவிட்டார். அவரின் திடீர் மரணம் ரசிகர்களிடமும், சின்னத்திரை வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல சின்னத்திர நடிகரும், எதிர் நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுடன் நடித்து வந்தவருமான கமலேஷ் பேசும்போது ‘அவர் டப்பிங் பேசிவிட்டு வெளியே வந்தபோது நான் உள்ளே சென்றேன். சரி காத்து வாங்க போகிறார் என நினைத்தேன். 10 நிமிடம் கழித்து அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டேன். அவரின் மகள் எடுத்து ‘அப்பா இறந்துவிட்டதாக சொல்கிறார்கள்’ என கதறி அழுதார். என்னால் நம்பவே முடியவில்லை. அருகிலேயே இருந்தேன். என்ன நடந்தது என ஒன்றுமே புரியவில்லை’ என கண்ணீர் விட்டார்.

இதையும் படிங்க: போன மாசம் வந்த படத்தை கூடவா காப்பி அடிப்பீங்க..அட்லியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..

google news