2 வருஷத்துல வாங்குன சம்பளம் 10 நாள்ல கிடைச்சது... ஆர்.ஜே.பாலாஜி ஆச்சரிய தகவல்!

#image_title
சினிமாவுல நுழையறது சாதாரண விஷயம் அல்ல. குதிரைக் கொம்பு. எத்தனையோ பேரு அதுக்காக கஷ்டப்பட்டு காணாமல் போயிருக்காங்க. ஒரு சிலர் தான் தப்பிச்சி பெரிய ஆளா ஆகிருக்காங்க. அதுல ஒருவர் தான் இவர். நடிகரும், இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி சினிமாவுக்குள் நுழைந்தது எப்படின்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனுடன் பகிர்ந்துள்ளார். அவரே சொல்லக் கேட்போமே.
சினிமாவுக்கு வாய்ப்பு வந்ததுக்கு அப்புறம் நான் நடிக்காம மறுத்தேன். நான் ஆர்.ஜே. அப்படித்தான் இருப்பேன். அங்கே போனா என் நேர்மை போயிடும்னு நினைச்சேன். அதனால நான் நடிக்காமலேயே இருந்தேன். அப்போ என் பிரண்ட்ஸ்கள் எல்லாரும் 'உனக்கு செம திமிரு அதான் நடிக்க வாய்ப்பு வரும்போதும் நடிக்க மாட்டேங்குற'ன்னு சொன்னாங்க. 'பண்ணிப் பார்த்துட்டு வேணாம். பிடிக்கலன்னா சொல்லலாம்' அப்படின்னாங்க. சரின்னு பட்டது.

sundar c
அப்போ சுந்தர்.சி. சாருக்கிட்டே இருந்து அழைப்பு வந்தது. நடிக்கத்தான் கூப்பிடுறாங்கன்னு நினைச்சேன். ஆனால் நடிக்கக் கூப்பிடல. பாலாஜி 'தீயா வேலை செய்யணும் குமாரு'ன்னு ஒரு படம் பண்றேன். என் ஜானர்ல இருந்து வேற மாதிரி எழுதிருக்கேன். யங்ஸ்டர்ஸ் எழுதிருக்காங்க. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்கன்னாரு. நான் படிச்சிட்டு அவருக்கிட்ட சேஞ்சஸ் சொன்னேன். சந்தானம் கேரக்டருக்கு அப்புறம் கர்ணா கேரக்டர் நல்லாருக்கு.
அதை வேணா டெவலப் பண்ணலாம்னு சொன்னேன். 'அந்த கர்ணா கேரக்டரை நீங்களே பண்ணுங்களேன்'னாரு. சரின்னு சொல்லிட்டேன். எனக்கு முதல் படத்துல 6 லட்சம் சம்பளம். இது நான் பிக் எப்எம்ல வாங்கறதை விட டபுள் மடங்கு சம்பளம். 12 நாள்தான் நடிச்சேன். 2வருஷத்துக்கு வாங்க வேண்டிய சம்பளம் 10 நாளைக்குள்ள கிடைச்சிருக்கு. நந்தம்பாக்கம் ஐடி கம்பெனில சூட்டிங்.
எனக்கு அந்த சீன் ஒருமாதிரி இருந்துச்சு. கூனி குறுகி நான் அப்படி எல்லாம் இருந்தது இல்லை. நான் வேணா போயிடறேன்னு சொன்னேன். இன்னும் பாதிநாள் தான் சூட்டிங். இருந்து பாரு. பிடிக்கலன்னா போன்னு சொல்லிட்டாரு. அங்க வந்து ஒரு நடிகர் 2மணி நேரமா நடிக்கிறாரு. சப்பை டயலாக். அவன்லாம் நடிக்கிறான். நான் ஏன் நடிக்கக்கூடாதுன்னு நடிச்சேன். அதனால எனக்கு நல்ல நம்பிக்கை வந்தது. கத்துக்கலாம்னு தொடர்ந்து நடிச்சேன் என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.