இனிமேல் அவன் கூட படம் பண்ணக் கூடாது! கைதி 2 பற்றி ஷாக் கொடுத்த அர்ஜூன் தாஸ்

by Rohini |   ( Updated:2024-02-26 10:10:01  )
arjun
X

arjun

Actor Arjundas: பேஸ் குரலுக்கு மிகவும் பிரபலமானவர் நடிகர் அர்ஜூன்தாஸ். அதுவும் கைதி மற்றும் மாஸ்டர் படங்களுக்கு பிறகு அவருக்கு என பெண் ரசிகைகள் அதிகமாகினர். பெருமான் என்ற படத்தில் நடிகராக அறிமுகமான அர்ஜூன்தாஸ் அதில் சொல்லிக் கொள்ளும் படி பிரபலமாகவில்லை.

அதனால் குறும்படங்களிலும் நடித்து வந்தார். பின்னர் அவருக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்ததுதான் கைதி. கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் தோன்றியவர் மக்கள் மத்தியில் இன்னும் அன்புவாகவே மின்னுகிறார். அதனை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதுக்கு சோக்கா போஸ் தந்த நயன்தாரா… முழுசா சொல்லாமல் ஊழலா செய்றீங்க?

அதன் பிறகு விக்ரம் படத்தில் எல்.சி.யு இருந்ததால் அதிலும் கடைசி காட்சியில் தோன்றி அனல் பறிக்க விட்டார் அர்ஜூன்தாஸ். தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்தாலும் அவருக்கு ஹீரோவாக நடிக்கவே வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவர் ஹீரோவாக நடித்த அநீதி படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் புதியதாக இன்னொரு படத்திலும் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார். அந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராமும் நடித்திருக்கிறாராம். காளிதாஸை பற்றி பேசிய அர்ஜூன்தாஸ் ‘இனிமேல் காளிதாஸ் நடிக்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நான் நடிக்கவே மாட்டேன். அந்தளவுக்கு காளிதாஸ் அரட்டை மற்றும் சேட்டைகள் செய்து சிரித்து வைத்துக் கொண்டு வருகிறார் ’ என கிண்டலாக கூறினார்.

இதையும் படிங்க: சாப்பிட கூட விடாமல் விஜயகாந்தை தடுத்த இயக்குனர்!.. அதுக்கு பின்னாடி இருக்கும் காரணம் இதுதான்!..

மேலும் கைதி 2 படத்தை லோகேஷ் எடுத்தால் அதில் கண்டிப்பாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன். ஏனெனில் நான் அந்தப் படத்தில் சாகவில்லை. அதனால் கைதி 2வில் இருப்பேன் என நம்புகிறேன் என்று புதிய அப்டேட்டை கொடுத்தார் அர்ஜூன்தாஸ்.

Next Story