இப்படி ஒரு டைட்டில் வச்சதால எனக்கு நேர்ந்த கொடுமை! அர்ஜூன் சொன்ன அந்தப் படம் எதுனு தெரியுமா?
Actor Arjun: தமிழ் சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் அர்ஜூன். 90களில் டாப் ஹீரோவாக வலம் வந்த அர்ஜூன் சிறந்த ஸ்டண்ட் நடிகராகவும் அறியப்பட்டார். கராத்தே போன்ற கைதேர்ந்த கலைகளை முறையாக பயின்றவர் அர்ஜுன்.
இவர் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். தேசப்பற்று மிக்க நடிகராகவும் பெரும்பாலான படங்களில் தன்னை காட்டியிருக்கிறார். சமீப கால படங்களில் அர்ஜூன் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..
இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் லியோ. அந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். அந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே அஜித்துடன் மங்காத்தா என்ற படத்திலும் அர்ஜூன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த நிலையில் தன் படத்தின் பெயரால் தனக்கு நேர்ந்த கொடுமையை அர்ஜூன் கூறும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: மருத்துவரை அடிக்க பாய்ந்த ரஜினிகாந்த்… அதுவும் அவர் அம்மாவுக்காக… என்ன நடந்தது தெரியுமா?
அர்ஜூன் ரஞ்சிதா ஆகியோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ஜெய்ஹிந்த். அதன் இரண்டாம் பாகம் 2014 ஆம் ஆண்டு ‘ஜெய்ஹிந்த் 2’ என்ற பெயரில் வெளியானது. இதில் கொடுமை என்னவென்றால் ஜெய்ஹிந்த் என்ற பெயர் வைத்ததால் நமது அரசாங்கம் டேக்ஸ் ஃப்ரீ பண்ணவில்லை என அர்ஜூன் கூறினார்.
ஏன் என கேட்க ஜெய்ஹிந்த் என்பது தமிழ் பெயர் அல்ல. அதனால்தான் என கூறியிருக்கிறார்கள். உடனே கடுப்பான அர்ஜூன் இந்தியாவுக்கு ஜெய் என்றுதான் கோஷமிட்டு வருகிறோம். இந்தியா என்றாலே அனைவரும் சொல்வது ஜெய்ஹிந்த் என்பதுதான்.
இதையும் படிங்க: பார்க்க ரவுடி மாதிரி இருக்கார் இவரு டைரக்டரா?!.. பாரதிராஜாவை பார்த்து பயந்த ராதிகா!…
அப்படி ஒரு பெயருக்கு இந்த கொடுமையா? என கேட்டு ‘சொல்லுங்க யார் கிட்ட பேசனும்னு சொல்லுங்க. நான் பேசுகிறேன்’ என எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லையாம்.