தெறிக்க!.. கொலை மாஸ் லுக்கில் ஆக்ஷன் கிங் அர்ஜூன்!. நம்ம தல எடுத்த போட்டோ பாருங்க!..
நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதில் மட்டுமல்ல. துப்பாக்கி சுடுவது, பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, ரிமோட்டில் இயங்கும் ஹெலிகாப்டரை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வமுடையவர். அதேபோல், அவர் கேமராவில் போட்டோக்களை எடுப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.
படப்பிடிப்பு தளங்களில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை தனது கேமராவில் விதவிதமான கோணங்களில் படமெடுப்பது அஜித்தின் வழக்கம். வீரம் படத்தில் நடித்தபோது நடிகர் அப்புக்குட்டியை அப்படித்தான் புகைப்படங்கள் எடுத்தார். அதேபோல், வேதாளம் படத்தில் நடிக்கும்போது மொட்டை ராஜேந்திரனை போட்டோ எடுத்தார்.
இதையும் படிங்க:ஆர்வத்துல போஸ்ட் பண்ணிட்டேன்! அங்க இருக்கிறவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித் குறித்து ஆரவ் சொன்ன தகவல்
அதோடு, வெளிநாடு சென்றால் இயற்கை காட்சிகளையும் போட்டோ எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். அதனால் எங்கு சென்றாலும் இவரின் கேமரா இவரோடு செல்லும். இப்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைசான் நாட்டில் கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்து வருகிறார். ஜாலியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும்போது வில்லன் குரூப் திரிஷாவை கடத்தி விட அஜித் அவரை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித் ஸ்லிம்மா மாறினது இப்படித்தானாம்!.. ஃபேவரைட்டையே தியாகம் பன்ணிட்டாரே!..
இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்காக அர்ஜூன் செம ஸ்டைலான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அர்ஜூன் தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘இதை எடுத்தது யார் என்று தெரியுமா?’ என கேட்டுள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் ‘இதை எடுத்தது தல அஜித்’ என பதிவிட்டு வருகின்றனர். கண்டிப்பாக இதை அவர்தான் எடுத்திருப்பார் என கருதப்படுகிறது. மங்காத்தா படத்திற்கு பின் அஜித்தும், அர்ஜூனும் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விக்கியை தூக்கி அடிச்சது போல விடாமுயற்சியிலும் வேலையை காட்டிய அஜித்.. என்ன தான் பாஸ் நடக்குது?