ஆர்வத்துல போஸ்ட் பண்ணிட்டேன்! அங்க இருக்கிறவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித் குறித்து ஆரவ் சொன்ன தகவல்

Actor Ajith: கோலிவுட்டில் இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக அஜித் இருக்கிறார். அந்த வகையில் நடிகர் ஆரவ் தீவிர அஜித் ரசிகராம். பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர்தான் ஆரவ். அதன் மூலம் கிடைத்த வரவேற்பால் சினிமாக்களில் நடித்து வருகிறார்.

கழகத்தலைவன் படத்தில் அதிரடியான வில்லனாக நடித்து மேலும் மக்களின் அபிமானங்களை பெற்றார். இப்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. அஜித்துடன் அஜர்பைஜானில் இருக்கும் ஆரவ்வின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: பாத்ததும் மெர்சலாயிட்டோம்.. தூக்கலான அழகை காட்டி மனசை ஜில்லாக்கிய நிவிஷா!..

அதில் ஆரவ்விற்கு இணையாக மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் அஜித் இருந்தது அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அஜித்தை பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு பழைய பேட்டியில் ஆரவ் கூறியிருக்கிறார்.

அஜித்தின் எல்லா படங்களையும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசிப்பவராம் ஆரவ். ஏகே 61 என அஜித் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒரு சமயம் வெளியாகி பெரிய டிரெண்டிங்காகியிருந்தது. அதைப் பார்த்ததும் ஆரவ் பிரமித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து ‘எப்படி இந்தளவுக்கு சார்மிங்காக இருக்க முடிகிறது அஜித் சாரால்?’ என்றும் பதிவிட்டிருந்தாராம்.

இதையும் படிங்க: பிடிவாதம் பண்ணிய எம்ஜிஆர் மனைவி… ஆனால் கடைசில கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே!…

அதுவும் ஃபேமிலியுடன் அஜித் சாரை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவரை பின்பற்றித்தான் பல விஷயங்களை நானும் செய்து வருகிறேன். எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனே அஜித் சார்தான். எனக்கும் திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இதுவும் அஜித் சாரின் இன்ஸ்பிரேஷன்தான் என ஆரவ் கூறினார்.

மேலும் ராமோஜி ஃபிலிம் சிட்டி சி.இ.ஓ-வுடன் ஒரு சமயம் ஆரவ் பேசிக் கொண்டிருந்தாராம். அப்பொழுது எல்லா நடிகர்களை பற்றிய பேச்சும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அந்த சி.இ.ஓ மிகவும் வயதானவராம். அவர் அஜித்தை பற்றி ‘மிகவும் எளிமையானவர். அவர் அவரது வாழ்க்கையை பார்க்கும் விதம் வித்தியாசமானது. தனக்கென்று எந்தவொரு பாடிகாடும் வைத்துக் கொள்ள விரும்பமாட்டார். சூட்டிங் முடிந்ததும் நைட் வேர்ஸுடன் மிகவும் கேஸுவலாகத்தான் இருப்பார்.’

இதையும் படிங்க: சென்சார் பிரச்சனையால் தலைப்பு மாற்றப்பட்ட ரஜினி படம்!. அட இது தெரியாம போச்சே!..

‘இந்த ஃபிலிம் சிட்டிக்குக்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருப்பார். ’ என ஆரவ்விடம் சொன்னாராம். இதைப் பற்றி கூறிய ஆரவ் ‘ நம் கோலிவுட்டில் அஜித்தை பற்றி இப்படி சொல்லியிருந்தால் ஒன்றும் பெரிதாக தெரிந்திருக்காது. ஆனால் அங்க இருக்கிறவங்க அஜித்தை பற்றி இப்படி சொல்லும் போது எத்தனை பேரை அவர் கவர்ந்திருக்கிறார் என்பதை பார்க்க முடிகின்றது’ என்று கூறினார்.

 

Related Articles

Next Story