‘அவர் எப்பவுமே கிங்’தான்.. அஜித் பற்றி கேட்டதற்கு அர்ஜூன் கொடுத்த ரிப்ளே

by Rohini |   ( Updated:2024-09-02 07:52:15  )
arjun
X

arjun

Arjun Ajith: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இப்போது பேட்ச் ஒர்க் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கெஸண்ட்ரா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜுனும் அஜித்தும் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இதற்கு முன் இவர்கள் இணைந்து மங்காத்தா திரைப்படத்தில் நடித்து ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு அனுமதி வரும்னு பார்த்தா கட்சிக்கு வந்துவிட்டதே ஆப்பு!

அந்தப்படம் எந்த அளவு ரசிகர்களை சென்று அடைந்தது என அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு அதே கூட்டணியில் விடாமுயற்சி திரைப்படமும் உருவாகி இருக்கிறது. இது எப்படிப்பட்ட ஒரு ஜானரில் உருவாகி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் திரைப்படம் பிரேக் டவுன் என்ற படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டாலும் ரீமேக் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்த அர்ஜுனிடம் விடா முயற்சி படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் கேட்டபோது அஜித் எப்பவுமே கிங் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: விக்ரம் படம் மாதிரி ‘கூலி’ படமும் எல்சியூவா? அட ஆமா? ரீவைண்ட் பண்ணி பாருங்க

மேலும் படம் கண்டிப்பாக உங்களை திருப்திப்படுத்தும் என்ற வகையிலும் பேசி இருக்கிறார் அர்ஜுன். இவர் ஒரு ஆக்சன் கிங் ஆக இருந்தாலும் எப்பவும் அஜித் தான் கிங் என கூறியது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் தீபாவளி அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு ரிலீஸில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் என கூறப்பட்டது. டிசம்பரில் ரிலீஸ் என்றால் அடுத்த மாதமே குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆவதால் நவம்பர் மாதம் எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: இசையமைப்பாளர் ஆகலனா இந்த வேலைதான் செஞ்சிருப்பேன்!.. ஓப்பனா சொல்லிட்டாரே இளையராஜா!…

Next Story