மேடையில் தேசிய கீதம் பாடும் போது அர்ஜுன் செய்த காரியம்! இப்படி ஒரு கேரக்டரா நம்ம ஆக்ஷன் கிங்?
தமிழ் சினிமாவில் 90களில் ஒரு முன்னனி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். செல்லமாக ஆக்ஷன் கிங் என அனைவராலும் அழைக்கப்படுபவர். நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் ராம நாராயணனால் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டார் அர்ஜுன். முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.
ஆரம்பத்தில் பல உருவ கேலிகளுக்கு ஆளானார் அர்ஜூன். ஏனெனில் நீட்டமான முகம் , கன்னடம் கலந்த தமிழ் என கேலிகளுக்கு ஆளானார். இருந்தாலும் அதையெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார் அர்ஜுன்.
அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் ஜெண்டில்மேன் திரைப்படம். சங்கர் இயக்கம் ஒரு பக்கம் ஏஆர். ரஹ்மான் இசை ஒரு பக்கம் என படம் மாஸ் ஹிட் ஆனது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களும் அர்ஜூனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ஒரு போலிஸ்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக பல படங்களில் அர்ஜூனின் கதாபாத்திரம் அமைந்தது. குறிப்பாக ஜெய்ஹிந்த், பிரதாப், போன்ற படங்களை சொல்லலாம். அதிலும் ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் அவரின் தேசப்பற்று மிக்க கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இயல்பாகவே அர்ஜூன் ஒரு தீவிர தேசப்பற்று மிக்கவராம். ஆகஸ்ட் 15 தேதியில் பிறந்ததனால் என்னவோ அளவுக்கதிகமான தேசப்பற்று மிக்க மனிதராகவே இருக்கிறார்.அவர் கையிலும் தேசியக் கொடியை பச்சையாக குத்தி வைத்திருக்கிறாராம்.
மேலும் ஒரு திரையரங்கில் ஏதோ விழாவில் கலந்து கொள்வதற்காக அர்ஜூன் செல்ல அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டதாம். மேடையில் எழுந்து நின்ற அர்ஜூன் கீழே ஒரு நபர் எழுந்து நிற்காமல் காதை குடைந்து கொண்டிருந்தாராம்.
இதையும் படிங்க : அங்கேயிருந்து விழுந்தா 100 அடி பள்ளம்!.. பயப்படாமல் விஜய் செய்த சம்பவம்..
இதை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் மேடையில் இருந்து நேராக கீழிறங்கி ஹேய் ராஸ்கல், அறிவில்லை என்று சொல்லி மீண்டும் தேசிய கீதம் பாடலை போட செய்து அந்த நபரை எழுந்து நிற்க சொன்னாராம் அர்ஜூன். இந்த செய்கையை பார்த்த அங்கு இருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியமாம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.