20க்கும் மேற்பட்ட படங்களில் உதவி ஒளிப்பதிவாளர். 2 படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியவர் அருள்தாஸ். அவரை நடிகனாக மாற்றியவர் இயக்குனர் சுசீந்திரன். நான் மகான் அல்ல படத்தில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர்ஹிட். கமல், ரஜினி, விக்ரம், விஜய்சேதுபதி, விஷால், சிம்பு, அருண்விஜய், விஜய் ஆண்டனி, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் என்று தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகன் ஆன போது அவரது அனுபவம் எப்படி இருந்தது என அவரே சில கருத்துகளை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
ஒரு ஆர்டிஸ்ட்டா ஆனதுக்கு அப்புறம் கொஞ்சம் வறுமை இல்லாம இருந்தது. அது வரைக்கும் அதுவரைக்கும் தினமும் 500க்கும், 1000க்கும் கஷ்டப்பட்டேன். சில நேரம் ரொம்பவும் கஷ்டமா இருந்தா நகையை அடகு வைப்போம். அப்புறம் திருப்புறதுமாகத் தான் இருந்தது. ஆனா ஒரு ஆர்டிஸ்டா ஆனதுக்குப் பிறகுதான் அந்த நிலைமை கொஞ்சம் மாறுனது என்கிறார் நடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ்.

இவர் அறிமுகமான படம் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல. அந்தப் படத்தில் கார்த்தியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்ததுன்னு சொல்கிறார். அந்தப் படத்துல குப்பத்துல உட்கார்ந்து மீன் சாப்பிடுற சீன்தான் நான் நடிச்ச முதல் சீன். முதல்ல பெரிய பெரிய ஆள்களா நிக்கிறாங்க. முதன் முதலா நடிகராகுறோம். என்னடான்னு கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தது. ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் ஒரு லேயர் மறைக்கும்.
அப்போ கார்த்தி சார் வந்து ‘நல்லா நடிக்கிறீங்க. கூலா பண்ணுங்க. ஒண்ணும் பிரச்சனை இல்லை’ன்னு நம்மளை ப்ரீ பண்ணி நடிக்க வச்சாரு என்கிறார் அருள்தாஸ். இந்தப் படத்தைத் திரையில் பார்த்ததும் என்னை விட நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ரொம்ப பிரமிப்பாக இருந்தது. அந்தப் படம் தரமான ஹிட் படம். ஜெயிச்சிட்டான்னு நம்பிக்கை வந்தது. டெக்னீஷியனா வந்தா கூட திரையில வந்தால் தான் சினிமாவுல இருக்கான்னு அவங்களுக்குத் தெரியுது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.