எங்களால முடியாது ராசா… தக் லைஃபில் இருந்து கழண்ட அடுத்த நடிகர்… போச்சா!

by Akhilan |
எங்களால  முடியாது ராசா… தக் லைஃபில் இருந்து கழண்ட அடுத்த நடிகர்… போச்சா!
X

Thug life: நடிகர் கமல்ஹாசன் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னணி நடிகர்கள் தொடர்ச்சியாக படத்தில் இருந்து விலகுவதாக கசிந்து வரும் தகவலால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர். தற்போது துல்கரை தொடர்ந்து அடுத்த ஒரு பிரபலமும் வெளியேறி இருக்கிறாராம்.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் தக் லைஃபை தயாரிக்கிறது.

இதையும் படிங்க: கொடுத்து வச்ச சூர்யா!.. கவர்ச்சி கடலாக கலக்கும் கங்குவா ஹீரோயின்!.. ஜோதிகா தான் ரொம்ப பாவம்!..

இப்படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் தமிழ், மலையாளம் என பிசியாக இருக்கும் துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்னையால் படத்தில் இருந்து விலகினார். இருந்தும் சூர்யாவின் புறானூறு படத்தில் தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில், துல்கரை தொடர்ந்து ஜெயம் ரவியும் தக் லைஃப் படத்தில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரதர், ஜீனி, தனி ஒருவன் 2 என தொடர்ந்து ஜெயம்ரவி கைவசமும் ஏகப்பட்ட படங்கள் இருப்பதால் அவருக்கும் கால்ஷீட் பிரச்னை என்றே கூறப்படுகிறது.

இதையடுத்து, முக்கிய வேடத்துக்காக நடிகர் சிம்புவிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் இருக்கிறதாம். உறுதியாகும் பட்சத்தில் துல்கர் வேடத்தில் சிம்பு நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏப்ரல் தேர்தல் முடிந்து ஷூட்டிங் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தக் லைஃபில் இருந்து வெளியேறிய துல்கர் சல்மான்… உள்ளே வரும் சூப்பர்ஸ்டார்… இந்த படமாவது ரிலீஸாகுமா?

Next Story