Connect with us
bha

Cinema History

இந்திய சினிமாவிலேயே தங்கத்தட்டில் சாப்பிட்ட ஒரே நடிகர்! ஆனால் கடைசி காலத்தில் அவரின் பரிதாப நிலை

Actor Bhagavathar: சினிமாவை பொறுத்தவரைக்கும் இன்று எப்படி இருப்போம், நாளை எப்படி இருப்போம் என்ற சூழ்நிலையில்தான் ஒவ்வொரு கலைஞர்களும் இருக்கிறார்கள். இது சினிமாவிற்கு மட்டும் பொருந்தாது. வாழ்வியலுக்கே பொருந்தக் கூடிய ஒரு விஷயமாகும்.

ஒரே நேரத்தில் உச்சாணிக் கொம்பில் ஏறியவர்களும் இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் சறுக்கி விழுந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை அனுபவித்தவர்தான் எம்.கே. டி.பாகவதர். அந்தக் கால சூப்பர் ஸ்டார் என்றே பாகவதரை அழைத்தனர்.

இதையும் படிங்க: போர் அடிக்குது.. என்ன செய்யிறதுனு தெரியலை.. அதான் இதை செய்ய போறேன்.. மிஷ்கின் தடாலடி..!

பாடியும் நடித்தும் மக்கள் மனங்களை கொள்ளைஅடித்தவர் பாகவதர்.முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகருமாக பாகவதர் விளங்கினார்.முதன் முதலில் பவளக்கொடி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான பாகவதர் 15 படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்து அதிக சாதனை பெற்ற படமாக ஹரிதாஸ் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் ஓடி இமாலய சாதனையை படைத்தது. பாகவதரை பொருத்தவரைக்கும் அவருக்கு என ஒரு சிறப்பம்சம் உண்டு. இந்திய சினிமாவிலேயே தங்கத்தட்டில் சாப்பிட்ட ஒரே நடிகர் பாகவதர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் இருந்தாராம்.

இதையும் படிங்க: வாய்ப்பு கேட்ட நடிகையிடம் கமல் சொன்ன வார்த்தை!.. அவங்க என்ன பதிலடி கொடுத்தாங்க தெரியுமா?..

தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை என்று சொல்லுமளவுக்கு அவரின் நிலைமை தள்ளப்பட்டிருக்கிறது. லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டைனைக்கு ஆளானார்கள்.

அதன் பிறகு மேல் முறையீடு செய்து இரண்டு ஆண்டு தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிறகு பாகவதர் ஒரு சில படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க: ஒரு பாடலை எடுக்க 17 நாள்களா? கிளைமாக்ஸ்லயும் புதுடெக்னிக்கைக் கொண்டு வந்த ஏவிஎம்

ஒரு கட்டத்தில் பணக் கஷ்டமும் வந்திருக்கிறது.ஈரல் நோயால் அவதிப்பட்டு பொது நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாகவதர் அதன் பின் இவ்வுலகை விட்டு நீங்கினாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top