ரஜினி , கமலை விட பாக்யராஜுக்கு வந்த மவுசு! பாத்ரூம் வரை சென்ற பெண் - கடைசில என்னாச்சு தெரியுமா?

Actor Bhagyaraj: இந்திய சினிமா உலகில் ஒரு சிறந்த ஸ்க்ரீன் ப்ளே ரைட்டராக திகழ்ந்தவர் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ். இவரின் இயக்கத்தில் பல படங்கள் பொக்கிஷமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள் போன்ற படங்களை சொல்லலாம்.

இதில் தாவணிக் கனவுகள் பட ரிலீஸ் சமயத்தில் பாக்யராஜ் ஏகப்பட்ட சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறார். அந்த நேரத்தில் கமல் , ரஜினி படங்களின் வியாபரம் 80லட்சம் , 90லட்சம் அளவில்தான் சென்றதாம். முதன் முதலில் தாவணிக் கனவுகள் படத்தின் வியாபாரம்தான் 1.50 கோடி வரைக்கும் சென்றிருக்கிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மாநாட்டுக்கு சென்று செம அடி வாங்கிய ரஜினிகாந்த்… அப்போதே ஏழாம் பொருத்தம் ஆரம்பிச்சிட்டோ?

இதை பாராளுமன்றம் வரைக்கும் கொண்டு போய்விட்டார்களாம். இப்படி கோடிக் கணக்கில் அதுவும் கிராமத்து பின்னனியில் உருவாகும் இந்தப் படம் இவ்ளோ வியாபாரம் நடந்திருக்கிறது? இதை வருமான வரித்துறையினர் கேட்க மாட்டீர்களா? என பெரும் பிரச்சினையாக்கி விட்டிருக்கிறார்கள்.

அடுத்த நாள் பாக்யராஜ் பாத்ரூமில் இருந்து வெளியே வர வெளியில் ஒரு பெண் அதிகாரி காத்துக் கொண்டிருந்தாராம். அதன் பிறகுதான் ஐடியில் இருந்து வந்திருக்கிறோம் என்றும் கொஞ்சம் ஒத்துழைப்பு தாருங்கள் என்றும் கேட்டிருக்கின்றனர். அன்றுதான் தாவணிக் கனவுகள் படத்தின் ரிலீஸாம். அதை பாக்யராஜ் சொல்லியும் அதிகாரிகள் கேட்கவில்லையாம்.

இதையும் படிங்க: SK23 படத்துக்கு பின் மாஸ் நடிகருடன் இணையும் முருகதாஸ்!. விட்ட இடத்தை பிடிப்பாரா?!…

மேலும் சென்சாரிலிருந்து சர்டிஃபிக்கேட்டும் வாங்க வேண்டியிருந்ததாம். உடனே வந்திருந்த அதிகாரிகள் பாக்யராஜுடன் ஒரு அதிகாரியை உடன் போக சொல்லி அவர் யார் என்பதையும் வெளியில் சொல்லக் கூடாது என பாக்யராஜிடம் கூறியிருக்கிறார்கள்.

சென்சார் அலுவலகத்திற்கு போயிருக்கிறார்கள். அங்கு பாக்யராஜை உள்ளே அழைக்க அவருடன் சேர்ந்து இந்த அதிகாரியும் உள்ளே போயிருக்கிறார். இவரை பார்த்ததும் சென்சார் அதிகாரி யார் இவர்? என பாக்யராஜிடம் கேட்க ‘எனக்கு தெரியாது’ என சொல்லியிருக்கிறார். அவ்ளோதான் அவரை வெளியே போக சொல்லி ஒரே களோபரம் ஆகிவிட்டதாம்.

இதையும் படிங்க: 2000களில் மிரட்டிய வில்லன்களுக்கு டப்பிங் கொடுத்த கௌதம் மேனன்!.. படத்துக்கே அதுதான் மாஸ்!.

 

Related Articles

Next Story